காவிரிப்பூம்பட்டினத்திற்கும்
உரிய பெயர் என்பது பெற்றாம். உரு - உட்கு, அச்சம்.
சம்பு என்பாள் சம்பாபதியினள் ; அப்பொழுது காவிரிப்பாவை
செங்குணக் கொழுகிச் சம்பாபதியின் அயலிற்றோன்ற, ஆங்கிருந்த முதியோள்
நீர்ப்பாவையை எதிர்கொண்டு 'வா' என, அதனைப் பெருந்தவன் கேட்டு 'வணங்கு'
என, குலக்கொடி தண்டமிழ்ப் பாவை தொழுது நிற்ப, அம் மூதாட்டி அவளைக் கவானிற்
கொண்டிருந்து 'அந்நாளில் என் பெயர்ப்படுத்த இம்மூதூரை நின்பெயர்ப் படுத்தேன்,
நீ வாழிய,' என்றமையால் இருபாற் பெயரிய மூதூர் என்க.
33--40. ஒரு நூறு வேள்வி உரவோன் தனக்குப் பெரு விழா அறைந்ததும்-ஒப்பற்ற
நூறு வேள்விகளைப் புரிந்த வலியோனாகிய இந்திரனுக்குப் பெரிய விழாக் கொள்ளுமாறு
பறை அறைந்ததும், பெருகியது அலர் எனச் சிதைந்த நெஞ்சிற் சித்திராபதிதான்
- மாதவி தவத்திறம் பூண்டமையின் நகரில் அலர் பெருகியது என்று அழிந்த உள்ளமுடைய
சித்திராபதி, வயந்தமாலையால் மாதவிக்கு உரைத்ததும் - தன் மகளின் தோழியாகிய
வயந்தமாலை வாயிலாக மாதவிக்குக் கூறியதும், மணிமேகலைதான் மாமலர்கொய்ய
அணி மலர்ப் பூம்பொழில் அகவயின் சென்றதும்-மணிமேகலை மாசற்ற மலர் கொய்யுமாறு
அழகிய மலர்களையுடைய பூஞ்சோலையாகிய உவவனத்தின் உள்ளே சென்றதும், ஆங்கு
அப் பூம்பொழில் அரசிளங் குமரனை - ஆண்டு அவ்வழகிய சோலையில் இளமைப்
பருவமுடைய அரச குமாரனை, பாங்கில் கண்டு அவள் பளிக்கறை புக்கதும் - அண்மையிற்
கண்டு மணிமேகலை பளிக்கறையுட் புகுந்ததும் ;
ஊரில் அலர் பெருகியதென உரைத்ததும் என்க. சித்திராபதி
மாதவியின் நற்றாய். வயந்தமாலை - மாதவியின் தோழி ; இவள் கூனியென்றும்
கூறப்படுவள். மாதவி - மணிமேகலையின் தாய். பூம்பொழில் - உவவனம். அரசிளங்குமரன்
- உதயகுமரன். பளிக்கறை - பளிங்காலாகிய அறை.
41--48. பளிக்கறை புக்க பாவையைக் கண்டவன் - பளிங்கறையுட் சென்ற
மணிமேகலையைக் கண்ட உதயகுமரன், துளக்குறு நெஞ்சில் துயரொடும் போயபின்
- நிலைகலங்கிய உளத்தில் துயருடன் சென்ற பின்னர், மணிமேகலா தெய்வம்
வந்து தோன்றியதும் - அங்கு மணிமேகலா தெய்வம் வந்து வெளிப்பட்டதும், மணிமேகலையை
மணி பல்லவத்து உய்த்ததும் - அத்தெய்வம் மணிமேலையை மணிபல்லவமென்னுந்
தீவிற்கொண்டு சென்றதும், உவவன மருங்கின் அவ்வுரைசால் தெய்வதம் சுதமதி
தன்னைத் துயில் எடுப்பியதூஉம் - புகழமைந்த அத்தெய்வம் பின்னர் மணிமேகலையுடன்
துணையாக வந்த சுதமதியை உவவனத்தில் துயில் எழுப்பியதும், ஆங்கத் தீவகத்து
ஆயிழை
|