இக் காப்பிய மெல்லாம் சமயச்
சார்புடையன எனினும், பண்டைக் காலந்தொட்டுப் பண்பட்டு வந்த நமது தமிழ் பண்பாட்டினைத் தம்முயிராகப் போற்றித் தம்மகத்தே பொதிந்து கொண்டிருத்தலை
அறிகின்றோம். இக்காலமே நமது பண்டைய இலக்கிய முறைமை முற்றுப் பெற்ற காலமும்
ஆகும்.
இனி, இம் மறுமலர்ச்சிக் காலத்தே
தோன்றிய இப் பெருங்காப்பியமெல்லாம் பண்டைத் தமிழ்ப் பண்பாட்டினைத்
தம் உயிராகக் கொண்டமையாலே தான் அந் நூல்கள் மேற் கொண்ட சமய நெறிகள்
தளர்ந்திளைத்த காலத்தும், இவற்றின் சுவை உணர்ந்த நந்தமிழ்ச் சான்றோராற்
பெரிதும் போற்றிக் கொள்ளப்பட்டன; இன்னும் இவை நந்தமிழ்மொழி உளதாகும்
காலமெல்லாம் தமிழ் மக்களாற் போற்றவேபடும் என்பது உறுதி.து உறுதி.
இனி, இவ்வினிய தமிழ்க்
கருவூலங்களை அழியவும் சிதையவும் இறந்தொழியவும்விட்டு இவற்றைப் பேணும்
மதுகையில் லாத தமிழ் மக்கள் வாளா உயிர்த்திருந்த இருட்காலம் ஒன்றும்
இத்தமிழகத்தே நிகழ்ந்ததுண்டு.
''சிலப்பதிகாரம், மணிமேகலை,
சங்கப்பாட்டு, கொங்குவேண் மாக்கதை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்
கீழ்க் கணக்கு, இராமன்கதை, நளன்கதை, அரிச்சந்திரன்கதை முதலிய
இலக்கியங்களை ஒருபொருளாக எண்ணி வாணாள் வீணாள் கழிப்பா'' என்று மனந்துணிந்து
வரைந்து கூவலாமைகள்
|