இனி, இச் செந்தமிழ் நாட்டிற்
றோன்றிய நல்லிசைப் புலவர்களுட் சிறந்தவராகிய கம்பநாடர் தமது
பெருங்காப்பியத்தில் ஓரிடத்தே சிறந்த இலக்கியம் எப்படி இருக்கவேண்டும்
என்பதை ஓர் உவமை கூறுமுகமாய் உணர்த்தியருளினார்; அது வருமாறு
;
''புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள்தந்து புலத்திற்
றாகி அவியகத்
துறைகள் தாங்கி ஐந்தினை நெறிய
ளாவிச் சவியுறத்
தெளிந்து தண்ணென்(று) ஒழுக்கமுந் தழுவிச்
சான்றோர் கவியெனக் கிடந்த கோதா விரியினை வீரர்
கண்டார்''
(கம்ப. சூர்ப்ப - 1.)
என்பதாம்.
இதன்கண் அடங்கிய கருத்துகள்
மிகவும் சீரியன. இதன்கண் அடங்கிய கருத்திற் கெல்லாம் இப்பெருங்கதை எடுத்துக்
காட்டாகத் திகழும் சிறப்புடையது என்பேம்.
இப்பெருங்கதையைத் தட்டித் திறந்த
பகுதிகளில் எல்லாம் பண்டைத் தமிழ் மணம் கமழ்கின்றது. தமிழகத்திற்கே
இந்நூல் ஒருபேரணிகலனாய் விளங்குகின்றது. யாண்டும் அறத்தின் திறமும், பொருளின்
பெற்றியும், இன்பத்தின் இயல்பும், வீட்டின் விளக்கமும், இந்நூலிற்
பேசப்படுகின்றன. கம்பநாடர் ''ஆன்ற பொருள்'' என்றது இவற்றையே யாம்.
தன்பால் அமைந்த சுவையானே ஓதுவார் உளத்தே பதிந்து பேரின்பம் தரும்
இயல்புடையதாக இப்பெருநூல் அமைந்திருக்கின்றது.
சிறந்த இலக்கியங்கள் தங்கட்
பயிலும் சொல்லானும் தொடையானும் இசையானும் அறமுதற் பொருளானும் தம்மைப்
பயில்வோர் உளத்தே இன்பப் பெருக்கினைச் செய்து அவர் உளத்தைப் பண்படுத்துந்
தன்மை உடையனவாதல் வேண்டும். இப்பெருங் கதை நமக்கு நல்கும் இன்பச்
சிறப்பினை இனிச்சிறிது காண்போம். இலக்கிய இன்பத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
|