அத்திருமுகப் பொருள் வருமாறு
;-
"ஒடியா விழுச்சீர் உதயணன்
ஓலை கொடியேர் மருங்குல் குயின்மொழிச்
செவ்வாய் மான
னீகை காண்க!
சேணுயர் மாட மீமிசை மயில்இறை
கொண்டென ஆடன்
மகளிரோ டமர்ந்தொருங்
கீண்டி முந்துபந் தெறிந்தோர் முறைமையிற்
பீழையாப் பந்துவிளை
யாட்டினுள் பாவைதன் முகத்துச் சிந்தரி நெடுங்கண்என் நெஞ்சம்
கிழிப்பக் கொந்தழற் புண்ணொடு நொந்துயிர்
வாழ்தல் ஆற்றேன்
அவ்வழல் அவிக்கும்
மாமருந்து கோற்றேன்
கிளவிதன் குவிமுலை
யாகும் பந்தடி தானுறப் பறையடி
யுற்றவென் சிந்தையும் நிலையும் செப்புதற்
கரிதெனச் சேமம் இல்லாச் சிறுநுண்
மருங்குற்(கு) ஆதார மாகி அதனொடு
தளரா அருந்தனந் தாங்கி அழியும்என்
நெஞ்சிற் பெருந்துயர் தீர்க்கும் மருந்து தானே
(நீயே) துன்றிய
வேற்கண் தொழிலும்
மெய்யழகும் பைங்கொள்
கொம்பாப் படர்தரும்
இந்நோய் ஆழ்புனற் பட்டோர்க்(கு) அரும்புணை
போலச் சூழ்வளைத் தோளி காமநற்
கடலில் தாழ வுறாமல் கொள்க தளர்ந் (து)உயிர் சென்றாள் செயல்முறை ஒன்றுமில்!
அன்றியும் அடுக்கிய இளைமை தலைச்செலின்
நாம்தரக் கிடைப்ப(து)இல் இரப்போர்க்(கு) அளிப்பது
நன்றென நினைத்த வாசகம் நிரப்பின்று
எழுத இடத்தளவு இன்மையின் கருத்தறி
வோர்க்குப் பரந்துரைத் தென்னை பாவை
இக்குறை இரந்தனென் அருள்.'' (4; 13. 63 - 91)
அன்பர்களே, ''சொன்னலங் கடந்தது
காமச்சுவை'' என்பர். இத்திருமுகத்தில் தன் காதலுள்ள முழுவதையும் உதயணன் திறந்து
காட்டியே இருக்கின்றான். எனினும் தன்மனக் கருத்தெல்லாம் சொல்லின் அடங்காமை கண்டு நொந்து போகின்றான்.
|