3.இளிவரற் சுவை
உதயணகுமரன் காம அளற்றில் இறங்கி
எளியனாயினான்; என இடபகன் யூகிக்குக்
கூறாநின்ற,
''போகப் பெருநுகம் பூட்டிய
காலை மாக விசும்பின் மதியமும்
ஞாயிறும் எழுதலும்
படுதலும் அறியா
இன்பமொடு ஒழுகுபுனல் அகழினை உடையெனக்
கிடந்த முழுமதில் நெடுங்கடை முதற்பெரு
நகரம் தாரணி யானை பரப்பித்
தலைநின்று ஆருணி அரசன் ஆள்வதும் அறியான் தன்னுயிர்
அன்ன தம்பியர்
நினையான் இன்னுயிர்
இடுக்கண் இன்னதென்
றறியான் அவையும் கரணமும் அவைவகுத்
திருவான் அந்தி மந்திரத் தருநெறி
யொரீஇத் தந்தையொ
டொறுக்கப் படாஅன்
சிந்தை அகன்உணர் வில்லா மகனே
போலத் தன்மனம்
பிறந்த ஒழுக்கின
னாகிப் பொன்னகர்
தழீஇய புதுக்கோப்
போலச் செல்வியுங் கொடாஅன் இவ்வியல்
புரிந்தனன் அண்ணல்''
(2, 9: 184-199)
என்னும் இப்பகுதி இளிவரற் சுவை பிறப்பித்தற்கொரு
சிறந்த எடுத்துக்காட்டாம்.
இனி, இராச கிரிய நகரத்தே
உதயணன் மாறு வேடத்தோடு சென்றிருந்த பொழுது அந்நகரத்து மன்னன் மகள் காமக்
கோட்டத்திற்கு வழிபாடு செய்யச் சிவிகையிற் சென்றாளாக, அப்பொழுது மக்கள்
நெருங்கி நின்று அக் காட்சியைக் கண்டு களித்தனர். இத்துனை ஆரவாரத்தோடு
செல்லும் இப்பெருமாட்டிதான் யாவளோ? என்று அறிய விரும்பிய உதயணன்
அக்கூட்டத்தினை ஊடறுத்துச் சென்றான். அங்ஙனம் செல்வானை ஆண்டு நின்ற
காவலர் கடிந்து தடுத்தனர். அந்நிலைமை தனக்கெய்திய தனை நினைத்த உதயணன்
தன்னுள்,
''நெஞ்சுநிறை துயரமொடு நீக்கச் சென்றனென் நெருநல் ;
இன்றிவண் நீக்கப் பட்டனென் ஆதலின்
நிலையா ஆக்கமுங் கேடும் யாக்கை
சார்வா ஆழிக் காலிற் கீழ்மேல்
வருதல் வாய்மை
யாமென''
(3. 6: 31-36)
நினைத்து வருந்தினான் எனவரும், இம் மொழிகள் இளிவரற் சுவைக்கு ஒப்பற்ற இலக்கிய மாதலோடு காஞ்சித்திணைப் பொருளை எத்துணை அழகாக
விளக்குகின்றன காண்மின்.
|