|
பதிப்புரை
|
நரவாண
காண்டத்தில் உதயண மன்னன் மைந்தனாகிய நரவாணதத்தன் கணிகையர் குலமகளாகிய
மதனமஞ்சிகையைக் கண்டு காதலித்து மன்றல் முடித்து மகிழ்வதும் மானசவேகன் அவளை
வானுலகம் கொண்டு செல்வதும் வியத்தக்க செய்தியாகும். பெருங்கதையின்
பெருமை அருமை எவராலும் எடுத்துரைக்கவியலாது.இந்நூல் இயற்றிய ஆசிரியர் பரந்த
நோக்க முடைய பல பொருளாராய்ச்சிப் பெரும் புலவராவர் அன்றியும் இரவலர்ப்புரந்த புலவருமாவர். வேளிர்மரபினர் இவர். கொங்குவேள என்பதே அம் மரபினர் என்பதை யுணர்த்தும். உலகியலிலும் உயிர்ப்பொருள் உயிரல் பொருள் என்ற பல பொருளிலும், அறநெறியிலும், மறநெறியிலும் பிற நெறியிலும்
இவர் அறியாதவை யொன்றுமின்று என்று துணிந்து கூறலாம். தமிழர் பண்பாடு பலவும் இதன்கண் அடங்கியுள்ளன. தமிழன்பர்கள் அனைவரும் வாங்கியும் வாங்குவித்தும் பயன எய்துவார்களாக. சைவசித்தாந்த நூற்பதிப்புக்
கழகததார்.
| |