முகப்பு
 
தொடக்கம்

xi

சிறப்புப்பாயிரம்

வேறு.

3. தேடினாரியாவரேகொலெழுவகையானுஞ்சீர்த்தி
நீடினாரவரேயென்பர்நீணிலத்துயர்ந்தமாந்தர்
பாடினாரியாவர்யாவர்பாடுவித்தார்கொலென்று
நாடினார்தெளியும்வண்ணநவையறநவிலலுற்றேன்.
4. நாணிரைத்தநேகதாரகாகணமாநவமணியுடனவவிதங்கொள்,
கோணிரைத்தீரேழ்புவனமும்வலஞ்செய்கொற்றநேமியின்
                                  வருகொண்டல்,
வாணிரைத்திரவிவிதிர்ப்பபோன்மின்னிவான்முகடுற
                               நெடும்பளிக்குத்,
தூணிரைப்பனபோனந்திமால்வரையின்சூழலிற்றாரை
                               கொண்டதுவே.
5. வம்பறாமலருஞ்செம்பொனுமணியுமருங்கெலாநெருங்குமக்
                                      குன்றின்,
உம்பரார்ப்பெழப்பாரளவுநின்றோங்கியுள்ளுறத்துள்ளி
                                      வீழருவி,
அம்புராசியைமான்மந்தரஞ்சுழற்றியமுதெழக்கடைந்த
                                   நாளதற்குத்,
தம்பமாமதியையதனுடன்பெயர்த்துச்சார்த்திவைத்தென்னலாந்
                                   தகைத்தே.
   

3. தடாகபிரதிஷ்டை, தநநிக்ஷேபம், அக்கிரகாரபிரதிஷ்டை, தேவாலய
பிரதிஷ்டை,நந்தவன பிரதிஷ்டை, பிரபந்தநிர்மாணம், ஸத்திரபிரதிஷ்டை என்ற
இவ்வேழுவகையால் கீர்த்தியைத் தேடுவர்: இவை 'ஸப்தஸந்தாநம்' எனப்படும்.
இவ்வேழுவகையிற் பிரபந்தநிர்மாணத்தாலாகிய புகழ், பாடுவார்க்கு உரியதாகும்:
அப்புகழைப் பெற்றவர் இன்னா ரென்று கூறத்தொடங்கியவர் அதனைச்
செய்வித்தாராகிய பாடுவித்தாரையும் உடன்கூறலுறுகிறாரென்க. நவையற -
குற்றமில்லாமல்: செவ்வனே. நவிலல் - சொல்லுதல்.

4. நூலாசிரியர் தோன்றிய திருமுனைப்பாடிநாட்டினைப் பற்றிக்கூறலுற்று
ஆங்குப்பாயும் பெண்ணையாறு நந்திமலையில் தோன்றுவதைக் கூறுகின்றார்:
நாள் -அசுவினி முதலிய இருபத்தேழு நட்சத்திரங்களை. நிரைத்து - ஒழுங்காக
உண்டாக்கி:(அவற்றோடு), தாரகாகணம் ஆம் நவ மணியுடன் - நட்சத்திரக்
கூட்டங்களாகிய புதியஇரத்தினங்களோடு. நவமணியென முறை நவின்ற என்று
பிரதிபேதம். நவவிதங்கொள்கோள் - ஒன்பதுவகையான கிரகங்கள்: அவை -
சூரியன் முதலியன. இவற்றால்எல்லாப்பொருட்கும் ஆதிகாரணன் திருமாலே
யென்று தெரிவித்தவாறு. வலஞ் செய் -பிரதட்சிணஞ் செய்கின்ற: ஈரேழ்
புவனத்தவரும் உய்யுமாறு திருமாலைவலஞ்செய்கின்றனரென்க. நேமி -
சக்கரப்படை: அதையுடைய திருமாலுக்கு,ஆகுபெயர். திருமால்போல் வருகின்ற
கொண்டலென்க: கொண்டல் - நீரைக் கொண்டமேகம். நேமியின் வரு -
மேருமலையினின்று வருகின்ற என்றாரு முளர்,இரவிபோன்ற பேரொளி படைத்த
வாளை நிரைத்து விதிர்ப்பபோல் மின்னி யென்க.மழைத்தாரை - பளிக்குத்தூணை
யொக்கும். நந்திமால்வரை - குடகுமலை: இதுபெண்ணையாறு தோன்றும்
மலையாகும்.

5. வம்பு - வாசனை. உம்பர்- மேலிடம். ஆர்ப்பு - ஆரவாரம். உம்பரூடெழ
என்றும்பாடம். உள்ளுற- (கண்டோர்) மதிக்க. அம்பு
 


முன் பக்கம்