xii
சிறப்புப்பாயிரம்
6. |
வெண்ணெயேகமழும்பவளவாய்விமலன்மெய்யெனக்கரு
கிமெல்லியலார்,
கண்ணையேயனையநெடுங்கடன்முகந்துககனமுந்
திசைகளும்விழுங்கிப்,
பண்ணைசூழ்ந்திலகுந்திருமுனைப்பாடிப்பழைய
நாடனைத்தையுமொருதன்,
பெண்ணையேகொண்டுபோகமுய்த்திடுமாற்புயலெனும்
பெயருடைப்பெரியோன்.
|
7. |
தொடுத்தநாண்மலர்வேய்ந்தகிலளைந்துந்திச்சுழிவயினில
ங்கமெய்த்தனங்க,
ளெடுத்துமேல்வீசிமணிமருங்கலையைவினங்கொள்
வண்டொடுசிலம்பிரங்க,
அடுத்தநீள்சுரதமகளிரிற்றடங்கணிறஞ்சிவப்புறக்
கரையழிந்து,
படுத்தபேரணைப்போர்புரிந்ததாலந்தப்பண்ணையங்
கானல்சூழ்பெண்ணை.
|
8. |
அவ்வைபாடலுக்குநறுநெய்பால்பெருகியருந்தமிழறிவினாற்
சிறந்து,
பௌவநீராடைத்தரணிமான்மார்பிற்பயிலுமுத்தரியமும்
போன்று,
மொய்வரால்கெண்டைவாளைசேன்மலங்குமுதலியசன
மெதிர்கொள்ளத்,
தெய்வமாநதிநீர்பரக்குநாடந்தத்திருமுனைப்பாடிநன்னாடு.
|
ராசி - இங்கே, பாற்கடல். மலையைச்சார்ந்த அருவி, மந்தர மலையைச்சார்ந்த அடைதூணானமதியையொக்குமென்க: தற்குறிப்பேற்றம். வைத்து - வைத்ததால்: எச்சத்திரிபு. 6. முகில்பெய்தலால் நந்திமலையில் அருவிபெருகிப் பின்னர்ப் பெண்ணைமாநதியாய்அம்முனைப்பாடி நாட்டிற்பாய்வது கூறப்படுகின்றது. மாற்புயலெனும் -கரியபுயலென்கிற. விமலன் - திருமால். ககனம் - ஆகாயம், திக்குத்திசைதெரியாமல்மேகம் கவிந்துகொள்வதை 'ககனமுந்திசைகளும்விழுங்கி' என்றார். பண்ணை - வயல்.திருமுனைப்பாடிநாடு என்றது - நடுநாடு. பெண்ணையேகொண்டு -பெண்ணையாற்றைக்கொண்டு மகளைக்கொண்டு என்றும், போகம் - விளைவு இன்பம்என்றும் இருபொருள்தரும்.
7.
இது அப்பெண்ணை அணைக்கட்டையுமுடையதாதல் கூறும். பண்ணை
அம் கானல்- வயல்களோடு அழகிய சோலைகளையுடைய பெண்ணையென்க.
பெண்ணைநதியைச்சுரதமகளிர்க்கு ஒப்பாகக்கூறுகின்றார்: சிலேடையுவமை:
மகளிர்க்குச்சேரும்போது,-அகில் - அகிற்புகை. உந்திச்சுழி - கொப்பூழாகிய சுழி.
வயின் - வயிறு. தனங்கள் -கொங்கைகள். மருங்கு - இடை. மருங்கு அலைய
மணி [ஆபரணங்களை]மேலெடுத்துவீசி. வண்டு - கைவளை. தடங்கண் - பெரிய
கண். கரையழிந்து -வரம்புகடந்து, அணை போர் - அணையிற் செய்யும்போர்:
கல்விப்போர்பெண்ணைநதிக்கு ஆகும் போது, அகில் - அகிற்கட்டைகள்.
உந்திச்சுழி வயின்இலங்க - உந்திபோன்ற சுழி இடங்கடோறும் இலங்க. மெய்த்
தனம் -உண்மையாகியபொன். மணி - நவமணி. மருங்கு - பக்கம். சிலம்பு
இரங்க - மலைஎதிரொலிசெய்ய. தடங்கள் - வாவிகள். கரை யழிந்து - கரை
கடந்து. படுத்த -கட்டப்பட்ட. பேர் அணை - பெரிய அணைக்கட்டு.
8. திருமுனைப்பாடிநாடு பெண்ணை நீர்பாயப்பெறுவதென்பது. உத்தரியம்போல்வதுபெண்ணைநதியென்க. ஒளவை பாட
|