முகப்பு
 
தொடக்கம்

xiii

சிறப்புப்பாயிரம்

9.பாவருந்தமிழாற்பேர்பெறுபனுவற்பாவலர்பாதிநாளிரவின்
மூவருநெருக்கிமொழிவிளக்கேற்றிமுகுந்தனைத்தொழுதநன்னாடு
தேவருமறையுமின்னமுங்காணாச்செஞ்சடைக்கடவுளைப்பாடி
யாவருமதித்தோர்மூவரிலிருவர்பிறந்தநாடிந்தநன்னாடு.

வேறு.

10. அந்தத்திருநாட்டந்தநதி யமுதம்பெருகியிருகரையுஞ்
சந்தத்துடன்காரகில்கமழத்தடங்காவகஞ்சூழ்தடநிறைப்பக்
கந்தக்குவளைமேய்பகட்டின்காலானெரிந்துகதிர்முத்தஞ்
சிந்தச்சிந்தக்கொழுமுனைக்குமுன்னேருழுவசெய்ச்சங்கம்.
11. கொழுநீர்மதுவுண்கடைசியர்தங்குழைதோய்விழியினெழு
                                   நிழலைக்,
கழுநீர்மலரென்றொருபகலுங்காலான்மயக்கிக்களைதுவைப்
                                   பார்,
முழுநீரூடுதமதுநிழன்முழுதுங்கண்டுதொழுதிறைஞ்சிச், செழுநீரரமங்கையரென்றுதிகைப்பார்நகைப்பார்செறு
                                   வெல்லாம்.

லுக்குப் பெண்ணைநதி நெய்பால் பெருகிய சரிதை, அருச்சுனன் றீர்த்தயாத்திரைச்
சருக்கத்து  16-ஆம் பாடலினுரையிற் கூறப்படும். ஒளவைபாடலுக்குப்
பெருகியதனால்,அருந்தமிழறிவினாற் சிறந்து என்றது. முதலிய  சனம் - 
முதலியவற்றின்திரள்;முதலியவற்றைச் சனங்கள் என்று கூறுதலும் ஒன்று.

9. இது அந்தத் திருமுனைப்பாடி நாட்டிற்குள்ள வேறுவகைச் சிறப்பைக்
கூறுவது. பாவலரென்றது - பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் என்ற
மூவரை: இவர்கள் முதலாழ்வார்களென்றுங் கூறப்படுவர். இவர்கள் சரித்திரமும்
தீர்த்தயாத்திரைச்சருக்கத்து 16-ஆஞ் செய்யுளிலுள்ளது.
நான்காமடியிற்குறிக்கப்பட்ட மூவர்-தேவாரம்பாடிய திருஞானசம்பந்தர்,
திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள்.திருநாவுக்கரசரும் சுந்தரமூர்த்திகளும்
இந்தநாட்டில் முறையே திருவதிகைதிருவெண்ணெய் நல்லூர் என்ற ஊரில்
தோன்றியவராவர். காணாச்செஞ்சுடர்க்கடவுளை என்றும் பாடம்.

10. யாற்றுநீர்பாய்வதனாலானநீர்வளவருணனை. அமுதம் - நீர். சந்தம் -
சந்தனம். தடங்காவகம் சூழ் தடம் - பெரியசோலையினுள்ளிடத்திற்
சூழ்ந்திருக்கும்தடாகம். பகடு - எருமைக்கடா. செய்ச்சங்கம் - கழனியிலுள்ள
சங்குப்பூச்சிகள்.முத்தஞ்சிந்த ஏருழுவது போல உழுவனஎன்க.
முன்னேயுழவுசெயுஞ்சங்கம் என்றும்பாடம்.

11. இதுவும் அது : ஒருபகலும் - களைபறிக்கும் ஒவ்வொரு பகலிலும்.
களைதுவைப்பார் - களைபறிப்பவராகியமகளிர். மயக்கித் திகைப்பாராய்
நகைப்பாரென்க.செறு - வயல்.
 


முன் பக்கம்