xv
சிறப்புப்பாயிரம்
16. | தென்னவர்சேரலர்செம்பியரெனப்பெயர்சிறந்த மன்னர்மூவரும்வழங்கியவரிசையாலுயர்ந்தோன் முன்னரெண்ணியமுத்தமிழ்ப்பாவலரெவரும் பின்னர்வந்தொருவடிவுகொண்டனரெனப்பிறந்தோன். |
17. | தாரகாயனவண்டலைதண்டலைச்சனியூர் வீரராகவனருள்பெறுவில்லிபுத்தூரன் ஊரராமுடிமண்மிசையுயர்புகழ்நிறுத்தித் தீரகாகளம்பெறுதலின்யாரினுஞ்சிறந்தோன். |
வேறு.
18. |
எங்குமிவனிசைபரப்பிவருநாளில்யாமுரைத்தவிந்தநாட்டிற்,
கொங்கர்குலவரபதியாட்கொண்டானென்றொருவண்மைக்
குரிசிறோன்றி,
வெங்கலியின்மூழ்காமற்கருநடப்பேர்வெள்ளத்துவிழா
மனான்காஞ்,
சங்கமெனமுச்சங்கத்தண்டமிழ்நூல்கலங்காமற்றலை
கண்டானே.
|
19. |
மற்றவனிப்புவியாளும்வளவனுக்குமுடிகவித்துவழுதித்
தெவ்வைச்,
செற்றவனுக்கவனியெல்லாஞ்செங்கோன்மைநிலையிட்டுச்
கமலமாதுங்,
செல்வமெல்லாம், கற்றவருக்கிருகையுடைக்கற்பகம்
போலினிதளித்துக்
கொற்றவையுமனங்களிப்பதன்னாமமேருவினுங்கோட்
டினானே.
|
16,தென்னர் -
பாண்டியர், கேரளரென்றும் பாடம்.செம்பியர் - சோழர்.
வரிசை -சிறப்பு. முன்னர் - முற்காலத்து.
17. தார காயன வண்டு - தாரமென்ற இசையைப் பாடவல்ல வண்டு.
காயணவண்டுஎன்று படிப்பாருமுண்டு. தாரகாகண வண்டு என்றும் பாடம். அலை
- சஞ்சரிக்கின்ற,தண்டலை - சோலை. தீரகாகளம் - மனத்திண்மையைக் காட்டும்
வெற்றிச்சின்னம்.தகப்பனார் பெயர் வீரராகவனென்பது இதிற் பெறப்படும்.
18. நான்குகவிகள் வில்லிபுத்தூராரைக் கொண்டு பாரதம்
பாடுவித்த
வரபதியாட்கொண்டான் சிறப்புக் கூறும்: நடுநாடு, மாகதக்கொங்கு எனப்படும்:
அதனையாண்டவர் கொங்கர்: அக் கொங்கர்குலத்துத் தோன்றியவன்
வரபதியாட்கொண்டானென்ற அரசன.. கலி - வறுமை. அடுத்துள்ள
கருநாடநாட்டினுள்வழங்கும் கன்னடபாஷையில் மனம்பதியாமல்
செந்தமிழ்ப்பாஷையிலேயே அன்னான்மனம் பதிந்ததனால், 'கருநடப்பேர்
வெள்ளத்து விழாமல்' என்றது.முதலிடைகடைச்சங்கமென்று மதுரையில் வழங்கிய
சங்கங்களில் அரங்கேறியதமிழ்நூல்களை நிலைகலங்காமற் பாதுகாத்துத்
தன்னாட்டில் நான்காஞ்சங்கமென்னுமாறுபுலவர் கூட்டத்தைத் திரட்டியிருந்தனன்
அந்தமன்னவ னென்க.
19. வழுதித்தெவ்- பாண்டியனாகிய பகைவன். கொற்றவை -
வீரலட்சுமி.
கோட்டினான்-எழுதினான். இச்செய்யுளின் குறிப்பினால், சோழவரசர்க்குக்
கீழ்ப்படிந்துஅவனதுபகைவரையோட்டிய சிற்றரசன் இந்த வரபதியாட்கொண்டா
னென்பதுபெறப்படும். பகைவென்றதனால் கொற்றவையும், புலவர்க்கு வழங்குமாறு
அப்
|