பிறருக்கு அஞ்சி, தோகையோடு மெல்ல அசைந்தது - தன்தோகையை
ஒடுக்கிக்கொண்டு மெல்ல உறங்குவதாயிற்று. (எ-று.)
மிருதவாகிய
அணையில் உறங்கிய மன்னவன், மயிலாகித் தரையில் துயின்றனனென்க.
அஞ் சில் ஓதி; சில் ஈண்டுச் சிறுமை; மங்கல வழக்கு.
ஓதி, முன்மயில்; இது வடமொழியில் அளகம் என்று வழங்கும். ‘ஓதியும் நுதலும் நீவி‘
என்பது காண்க. பஞ்சி - பஞ்சு ; ‘பஞ்சியடிப் பவளத் துவர்வாயவள்‘ என்பது காண்க.
‘சிறு பூளை செம்பஞ்சு வெண் பஞ்சு சேண, முறுதூவி சேக்கையோ ரைந்து‘ (சீவக 838 உரை)
இவ்வைந்தையும் அணையில் அமைத்திருப்பர். ஆதலின் பஞ்சி மெல்லணை என்றார் எனினுமாம்.
பாரவுதல் - பரப்புதல். (7)
162. |
சுரைய பாலடி சிற்சுவை பொற்கலத் |
|
தரைய மேகலை யாரி மைர்ந்துணும |
|
அரையன் மாமயி லாய்ப்புறப் பள்ளிவாய |
|
இரைய வாவி யிருந்தயில் கின்றதே. |
(இ-ள்.)
சரைய பால் சுவை அடிசில் - பசுவின் மடியிற் கறந்த பாலில் ஆக்கிய சுவையுள்ள சோற்றினை,
பொன் கலத்து - பொற்கிண்ணத்தில் இட்டு, அரைய மேகலையாரின் இடையில் மேகலை யணிந்த
உரிமைமகளிர் வேண்டலால், அமர்ந்து உணும்-விரும்பி உண்ணும், அரையன் -யசோதரன்,
மாமயிலாய் - --, புறப் பள்ளிவாய் - அரண்மனையின் புறமுள்ள அறையில் தங்கி, இரை
அவாவி இருந்து - (தனக்கு இடப்படும்) இரையை எதிர்நோக்கியிருந்து, அயில்கின்றது -
உண்கின்றது. (எ-று.)
இன்சுவைப் பாலன்னத்தைப்
பொற்கலத்தி விட்டு மகளிர் வேண்ட உண்ட மன்னன் மயிலாகி, காலந் தவறிக் கிடைக்கும்
உணவை உண்டு வருந்தினா னென்க.
சுரை - பசுவின் மடி. மேலையாரின் அமர்ந்து - மகளிர்
வேண்டி யூட்டுதலால் அவர்களுக்காக விரும்பி என்க. ‘அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட‘
(நாலடி).
|