- 204 -

என்பதனோடு ஒப்பிடுக.  அரையன், அரசன்;  இடைப் போலி.  இரை. தானாகக் கிடைத்த இரை யெனினுமாம். அவாவுதல், இச்சித்தல்.                (8)

163.  வந்து குப்பையின் மாசன முண்டபின்
  சிந்து மெச்சில்கள் சென்று கவர்ந்துதின்
  றந்து ளும்1 மக ழங்கணத் தூடுமாய்ச்
  சந்தி ரம்மதி நாய்தளர் கின்றதே

(இ-ள்.) சந்திரமதி நாய்-(பூர்வம்)  சந்திரமதியாய் இருந்து பிறந்த நாய், மாசனம் உண்ட பின் - மக்கள் உண்ட பிறகு, வந்து - (வெளியே) வந்து, குப்பையின் சிந்தும் எச்சில் - குப்பைகளின்மேல் எடுத்தெறியும்எச்சில் உணவு களை, சென்று - அங்குப்போய், கவர்ந்து தின்று - ஆவலுடன் கவ்வித் தின்று, அந்துளும் - அந்தப்புரத்திலும், அகழ் அங்கணத்து ஊடும் ஆய் -தோண்டப்பெற்ற  ஜலதாரைகளின் இடையிலும், தளர்கின்றது - வருந்தி மெலிகின்றது.

சந்திரமதி, ஈண்டு நாயாகி எச்சில் உண்டு சாக்கடை முதலிய இடங்களில் தங்கி மெலிகின்ற தென்க.

சந்திரம்மதி, விகாரம். அந்த; உள் - அந்துள் என்றாயது போலும், அங்கணம் - ராஜாங்கணம் எனவுமாம்.*                                                       (9)

164.  நல்வ தத்தொ டறத்திற நண்ணலார
  கொல்வ தற்குள முன்செய் கொடுமையான
  ஒல்வ தற்கரு மாதுய ருற்றனர்
  வெல்வ தற்கரி தால்வினை யின்பயன்.

 (இ-ள்.) (யசோதர மன்னனும் தாயும்), நல்வதத்தொடு அறத்திறம் நண்ணலார் - சிறந்த விரதத்தோடு  சீலம் முதலியவைகளை ஏலாதாராகி, முன்-முன்னம், கொல்வதற்கு உளம் செய் கொடுமையான் - பலியிட மனத்தால் நினைத்த தீவினையால், ஒல்வதற்கு அரும் - பொருந்துதற்கரிய, மாதுயர் உற்றனர் - மிக்க துயரம் உற்றனர், (ஆதலின்), வினையின்

 

1 அந்துணும்.

* ஸ்ரீ புராணம்,