|
இதுமுதல்
ஏழுகவிகளில் யசோதரனாகிய ஆடு
எண்ணியது
கூறப்படும்
|
191. |
அத்த லத்தக ராங்கது கேட்டபின் |
|
|
ஒத்த தன்பிறப் புள்ளி யுளைந்துடன |
|
|
இத்த லத்திறை யான விசோமத |
|
|
மத்த யானையின் மன்னவ னென்மகன். |
(இ-ள்.) அத்தலத் தகர் - அவ்விடத்திருந்த
(யசோதரனாகிய) ஆடு, ஆங்கு - அப்போது, அது கேட்டபின் - அவ்வந்தணர் கூறிய ஆசிமொழியைக்
கேட்டவுடன், ஒத்த - (இவ்யசோமதி முதலியோர் தன் பந்து என்றறிவதற்கு) ஏற்ற, தன்
பிறப்பு - (யசோதர மன்னாயிருந்த) தன்பிறவியினை, உள்ளி - (பழம் பிறப்புணர்வால்)
நினைந்து, உளைந்து - வருந்தி, உடன் - அப்பொழுதே, இத்தலத்து இறை ஆன - இந்நிலத்திற்கு
வேந்தனாகிய, மத்தயானையின் இசோமதி
மன்னவன் - மதத்தோடு கூடிய யானைகளையுடைய யசோமதியரசன், என்மகன் - என்மகனே.(எ-று.)
தகர் இவ் யசோமதி என் மகனே என்றெண்ணிய தென்க.
‘தகர' என்பது,
‘தன் உளம் நோக' (198)
என்பதனோடு முடியும். ஈண்டு யசோமதி தன் மகனானதைமட்டும் கூறியது, மயில் முதலிய பிறவிகள்
அறியவியலாது யசோதர மன்னானாயிருந்த பிறப்பொன்றுமட்டுமே உணர்ந்ததனால் என்றுணர்க.
(37)
|
192. |
இதுவென் மாநக ருஞ்சயி னிப்பதி |
|
|
இதுவென் மாளிகை யாமென் னுழைக்கலம் |
|
|
இதுவெ லாமிவ ரென்னுழை யாளராம் |
|
|
இதுவென் யானிவ ணின்னண மாயதே. |
(இ-ள்.) இது என் மாநகர் உஞ்சயினிப்பதி - இந்நகர் எனது பெரிய
நகரமாகிய உஞ்சயினி நகரமாகும்; இது என்மாளிகை ஆம் - இது யான் வசித்திருந்த அரண்மனையாகும்,
இது எலாம் - இவையாவும், என் உழைக்கலம் |