- 222 -

- யான் உபயோகித்த பாத்திரங்கள்; இவர் என் உழையாளர் ஆம் - இவர்கள் என் ஏவலர்களாவர்; இவண் - இவ்விடத்தே, யான் - யான்மட்டிலும், இன்னணம் ஆயது  இது என் - இல்வண்ணம் ஆடு ஆகிய இத்தன்மை யாது காரணம்! (எ -று.)

இந்நகரம் முதலியன என்னுடையனவேயாக,  யான் மட்டும் ஆடாகியது யாது காரணமென்று யசோதரன் எண்ணினானென்க.

மாநகராகிய உஞ்சயினிப்பதி உழைக்கலம் - பொன், வெள்ளி முதலியவற்றாற் செய்த பாத்திரங்கள்.  ‘உழைக்கலமேந்தி‘ என்றார் (பெருங். 319)  கொங்கு வேளிரும்.  இது எலாம் - ஒருமைப்பன்மை மயக்கம்.  உழையாளர் - அருகிலிருப்போர்; அமைச்சர் எனவுமாம்.  அமாத்யன் என்பர் வடமொழியில்.  (அமா - பக்கம்.)                      (38)

193.  யான்ப டைத்த பொருட்குவை யாமிவை
  யான்வ ளர்த்த மதக்களி றாமிவை
  யான ளித்த குலப்பரி யாமிவை
  யான்வி ளைத்த வினைப்பய னின்னதே.

(இ-ள்.) இவை - இவையாவும். யான் படைத்த பொருட்குவை ஆம் - யான் ஈட்டிய செல்வக் குவியல்களாகும்;  இவை - --, யான்  வளர்த்த - --, மதக் களிறு ஆம் - மதஞ் செறிந்த யானைகளாகும்;  இவை - --, யான் அளித்த குலப்பரியாம் - யான் காப்பாற்றிய உத்தம விலக்கணக் குதிரைகளாகும்;  யான் விளைத்த - யான் ஆக்கிய, வினைப்பயன் - வினையின் பயன், இன்னது - ஆடாகிய இத்தன்மையாயது.  (எ-று.)

இவை யாவும் இங்ஙனம் அழியாதிருக்க,  யான்மட்டிலும் ஆடானது என் வினைப்பயனேயென்று யசோதரன் எண்ணினானென்க.

களிறு பரி என்னும் சொற்கள் தொகுதியொருமை; ஜாத்யேக வசனம். (39)