(இ-ள்.) உழையாளர் - பணியாளர்,
வரை செய்தோள் மன்ன - வரையெனத் திரண்ட தோள்களையுடைய வேந்தே ! வணிகர்
மயிடத்தால் - (அயல் நாட்டு ) வணிகர்கொண்டுவந்த எருமையினால், நம் - நம்முடைய,
அரைச அன்னம் எனும் பெயர் ஆகும் - ராஜஹம்ஸம் என்னும் பெயரையுடையதாகிய, அரைச வாகன
மாயது - ராஜவாஹனமாகிய குதிரை, போயது என்று - இறந்துவிட்ட தென்று, அரசற்கு -அரசனுக்கு,
உரை செய்தார் - உரைத்தனர்.
செய், உவமவுருபு, அரைசவன்னம், அரைச வாகனம் இவற்றில் ஐகாரம், போலி, உழையாளர்
- ஈண்டுக் குதிரையுடன் சென்றவர். (48)
ஏவலர்
‘வணிகர்எருமையால் நம் குதிரை இறந்த‘ தென்று
அரசனுக்கு அறிவித்தன ரென்க.
203. |
அணிகொன் மாமுடி மன்ன னழன்றனன் |
|
வணிகர் தம்பொருள் வாரி மயிடமும் |
|
பிணிசெய் தெம்முறை வம்மெனப்
பேசினான் |
|
கணித மில்பொருள் சென்று கவர்ந்தனர். |
(இ-ள்.) அணிகொள் மாமுடி மன்னன் - அழகியசிறந்த முடியணிந்த வேந்தன்,
அழன்றனன் - கோபமுற்றவனாகி, வணிகர் பொருள் - வணிகர் கொணர்ந்த பல பொருள்களையும்,
வாரி - வாரிக்கொண்டு, மயிடமும் பிணி செய்து - அவ்வெருமையையும் பிணித்து, எம் உழை
- எம்மிடம், வம் என -வருக என்று, பேசினான் - கட்டளையிட்டான் சென்று - அவ்வுழையவரும்
போய், கணிதம் இல்பொருள் - கணக்கிட முடியாத பொருள்களை, கவர்ந்தனர் - கொள்ளை
கொண்டனர். (எ-று.)
ஏவலர், அரசன்கட்டளையால் வணிகர்பொருள்களைக் கவர்ந்தனரென்க.
வம், வாரும் என்பதன் விகாரம். அழன்றனன் முற்றெச்சம். (49)
204. |
அரச னாணை யறிந்தரு ளில்லவர் |
|
சரண நான்கினை யுந்தளை செய்தனர் |
|