|
கரண மானவை யாவுங் களைந்தனர் |
|
அரண மாமற னில்லது தன்னையே. |
(இ-ள்.) (பின்), அரசன் ஆணை
அறிந்து - அரசனது கட்டளையை அறிந்து, அருள் இல்லவர் - அருளிலராகிய ஏவலர், அரணம்
ஆம் -(உயிர்களுக்குக்) காவலாகிய, அறன் இல்லது தன்னை - அறத்தின் துணையிலாத அவ்வெருமையை,
சரணம் நான்கினை உம் - நான்கு கால்களையும், தளை செய்தனர் - இறுகக்கட்டி, கரணமானவை
யாவும் - (பண்டங்களை ஏற்றுதற்குரிய) கருவிகளையெல்லாம், களைந்தனர் - நீக்கினர்.
ஏவலர், எருமையைப் கைப்பற்றின ரென்க
சரணம் - கால், தளை - கட்டுதல். கரணம் - உபகரணம். களைதல் - நீக்குதல். மேற்
செய்யுளில், ‘மயிடமும் பிணி செய்து வருக’, என்று அரசன் கூறியிருப்ப. ஏவலர் அதனைப் பலவாறு வருத்திக் கொன்றன ரென்பது முன்வருஞ்
செய்யுட்களால் அறியப்படுதலின், பின்னர் அரசன் அவ்வாறு ஆணையிட்டான் ஆவன்; அதனையே,
‘ஆணை அறிந்து’ என்றார் எனக் கொள்க. இனி, ஏவலரே கொன்றார் என்பதற்கு அருளில்லவர்
என்றா ரெனினுமாம்.
205. |
கார நீரினைக் காய்ச்சி யுறுப்பரிந் |
|
தார வூட்டி யதன்வயி றீர்ந்தவர்1 |
|
நெய்பெய் சலாகை கடைந்தபின் |
|
கூர்முண் மத்திகை யிற்கொலை செய்தனர். |
(இ-ள்.) அவர் -அந்த ஏவலர்,
உறுப்பு அரிந்து - (அவ்வெருமையின் காது முதலிய) உறுப்புக்களை அரிந்து, காரநீரினை -
காரநீரை, அதன் வயிறு ஆர ஊட்டி - அவ் வெருமையின் வயிறு நிறையும் படி செலுத்தி, காய்ச்சி
- (கீழே எரித்து) அந்நீர் கொதிக்கும்படி செய்து, ஈர்ந்து - (வயிற்றை) வாளால்
அறுத்து, சாரநெய்பெய் சலாகை - சாரமான நெய் ஊற்றிக் காய்ச்சிய இருப்புக்கோலால்,
கடைந்தபின் - (அவ்) வயிற்றில் கடைந்த பிறகு, கூர்முள் மத்தி
|