- 241 -

(இ-ள்.) இணர் ததை பொழிலின்  உள்ளால் - பூங்கொத்துக்கள் செறிந்த சோலையினிடத்தே, இசோமதி என்னும் மன்னன் - யசோமதி என்னும் அரசன், வணர் ததை குழலி - சுருண்டு செறிந்த கூந்தலையுடையளான. புட்பாவலி எனும் - புஷ்பாவலி என்னும் பெயரையுடைய, துணைவியோடு - பட்டமகிஷியோடு, வணர்ததை - வளைந்து அடர்ந்த, வல்லி புல்லி - கொடிகளைத் தழுவி, வளர் இளம் பிண்டி-வளர்ந்த இளமையான அசோகமரத்தின்கீழ்,  (அமைந்தவசந்த மண்டபத்தில்),  வண்டு  ஆர் இணர்ததை தவிசின்ஏறி - வண்டினம் நிறைந்த பூங்கொத்துக்கள் செறிந்த பூவணையிலேறி, இனிதினின் அமர்ந்திருந்தான் - இன்பத்தோடு வீற்றிருந்தான்.  (எ-று.)

மன்னன், வசந்த காலங் கழித்தற்கு தேவியுடன் சோலையிடத்தே தங்கினானென்க.

வணர் - வளைவு, ததைதல்  -  நெருங்குதல்.              (2)

222.  பாடக மிலங்கு செங்கேழ்ச் சீறடிப் பாவை1 பைம்பொற்
  சூடக மணிமென் றோளிற் றொழுதனர் துளங்கத் தோன்றி
  நாடக மகளி ராடு நாடக நயந்து நல்லார்
  பாடலி னமிர்த வூறல் பருகினன் மகிழ்ந்தி ருந்தான்.

(இ-ள்.) (அவ்வரசன்), பாடகம் இலங்கும் - பாடகம் விளங்கும், செங்கேழ் சீறடி - செந்நிறத்தவாகிய சிற்றடிகளையுடைய, பாவை - பாவை போன்ற, நாடக மகளிர் - நாடகமாடும் மகளிர், பைம்பொன் - பசிய பொன்னாலாய, சூடகம் அணி மென் தோளின் தொழுதனர் - வளைஅணிந்த மெல்லிய கைகளால் தொழுது, துளங்கத்தோன்றி - (கண்டோர் மனம்) சலனமுறத்தோன்றி, ஆடும் நாடகம் நயந்து - ஆடுகின்ற நாடகத்தை விரும்பிப் பார்த்து, நல்லார் பாடலின் அமிர்த வூறல்  - பாடல் மகளிரின் கீதாமிருதத்தின் இனிமையை, பருகினன் - செவியாரவுண்டு, மகிழ்ந்திருந்தான் - --. (எ - று.)

 

1 பாவை