மன்னன், நடனமாதராடும் நாடகத்தைக் கண்டும் பாடல்மகளிர் பாடும் இசையைச் கேட்டும்
இனபுற்றானென்க.
பாடகம் - மகளிர் காலணி: ‘நல்லார் பாடகம்‘ (சீவக,510) ‘பாடகத் தாமரைச் சீறடி
பணிந்து‘ (மணி, 25, 85). கேழ் - நிறம். சூடகம் - கைவளை: ஹஸ்தகங்கணம். (3)
223. |
வளையவர் சூழ லுள்ளான் மனமகிழ்ந்
திருப்ப மன்னன் |
|
தளையவிழ் தொடையன் மார்பன்
சண்டமுற் கருமன்போகி |
|
வளமலர் வனத்துள் தீய மனிதரோ
டனைய சாதி |
|
களைபவன் கடவுட் கண்ணிற் கண்டுகை
தொழுது நின்றான் |
(இ-ள்.) மன்னன் - --, வளையவர் சூழல் உள்ளால் - வளையணிந்த
மகளிர்கூட்டத்திடையில், மனம் மகி்ழ்ந்து இருப்ப - மனங்களித்திருக்க, தளை அவிழ்
தொடையல் மார்பன் - கட்டவிழ்ந்து மலர்ந்த பூமாலையணிந்த மார்பினையுடையவனான, சண்ட
முன் கருமன் - சண்ட கருமன், வளம் மலர் வனத்துள் - வளவிய மலர் செறிந்த வனத்தினுள்,
போகி - சென்று, தீய மனிதரோடு - தீவினைபுரியும் (கள்ளர் முதலிய) மனிதரோடு, அனைய
சாதி - அவரை யொத்த துஷ்ட மிருகங்களையும், களைபவன் - போக்கிக்காவல் புரிபவன்,
கண்ணில் - கண்ணெதிரில், கடவுள் - (யோகத்தில் அமர்ந்திருக்கும் ஒரு) முனிவரனை,
கண்டு- --, கை தொழுது - கைகுவித்து வணங்கி. நின்றான் - தாழ்ந்து நின்றான். (எ-று.)
மன்னவன் மகிழ்ந்திருக்க, காவல் புரியும் சண்டகருமன்,
தீயன அகற்றி வருங்கால் கடவுளைக் கண்டானென்க.
தளை - கட்டு. தளையவிழ்தல் - கட்டவிழ்தல்: முறுக்கவிழ்தல். தொடையல், தொடுத்துக்
கட்டும் மாலை. சண்டம் என்ற பதம் முதலிலுடைய கருமன் - சண்டகருமன்;
‘அபயமுன்னுருசி ‘ யென்றது போல்வது. இராசமாபுரத்துச் சண்டகருமன் (22) வேறு, இவன்
வேறு, கடவுள் - முனிவன்: ‘கடவுள் தே முனி நன்மைப் பேர்‘ என்பது நிகண்டு. ‘கொல்லாத
விரதத்தார்தங் கடவுளர் கூட்டமொத்தார்‘ என்றார்கம்பரும். சண்டகருமனால் நீக்கப்பட்டன,
கள்ளர், புலி முதலியன என்று வடமொழிக்காவியம் கூறும்.
(4)
|