நாககுமார
காவியம்
|
அவற்றுட்
சீவக சிந்தாமணி முதலிய பெருங் காப்பியங்களொத்த சிறப்புடைய தமிழிற் சமணர்
எழுதி வைத்த யசோதர காவியம், உதயண காவியம், நாககுமார காவியம், சூளாமணி,
நீலகேசி யெனும் பெயரிய சிறு காப்பியங்களும் உள.” |
(சூளாமணிப்பதிப்பு1889-
பதிப்புரை,பக்.3) |
இப்
பதிப்புரைப் பகுதியால் ஐஞ்சிறு காவியங்கள் இன்னின்ன என்பது தெரியவரும். ஏட்டுப்
பிரதிகளில் சூளாமணிக் காவியத்தை எழுதுமிடத்து ‘இரண்டாவது’ என்னும் எண்குறிப்பு இருப்பது
கொண்டு இதனை ஐஞ்சிறு காவியத்துள் இரண்டாவது எனவும் இவர் கருதுகிறார்.
|
|
“சூளாமணி இரண்டாவது காவியமென அதன் பிரதி களிலிருக்கும் குறியீ்ட்டினாற் தெரிய வருகின்றது. முதலாவது காவியம் எதுவென்றும் மற்றைய காவியங்களின் வரிசைக்கிரமம் இன்னதென்றும் விளங்க வில்லை. நீலகேசி என் கைக்கு அகப்படவில்லை. ஆயிரத்து நானூற்று சொச்சஞ் செய்யுளுள்ள மேரு மந்தர புராணத்தில் முதற்பாகமும் யசோதர காவிய முங் காஞ்சிபுரத்திலிருந்த ஸ்ரீ பாகுபலி நயினாரால் அச்சிடப்பட்டன. எஞ்சியன அச்சில் வரவில்லை. சுரவிரத காவியம் என்று ஒன்று வடமொழியில் இருப்பினும் தமிழிற் செய்யப்பட்டதாகத் தெரிய வில்லை.”
|
நீலகேசி தவிர ஏனைய காவியங்களின்
பிரதிகள் இவருக்குக் கிடைத்திருந்தன என்பது இப் பகுதியால் வெளியாகிறது. இவர்தம்
ஆய்வுரையைக் கொண்டே முற்பட இலக்கிய வரலாறு எழுதிய பூரண லிங்கம் பிள்ளை முதலியோரும்
ஐஞ்சிறு காவியம் என்னும் தொகுதி பற்றி விளக் கம் தந்துள்ளனர்.
|
“ |
பற்றா
மிலக்கணநூற் பாவும் நூற் பாவறிந்து |
|
கற்றார்
வழங்கு பஞ்ச காப்பியமும்--கொற்றவருக் |
|
கெண்ணிய
வன்னனைக ளீரொன் பதுமறியக் |
|
கண்ணிய
மிக்கபெருங் காப்பியமும்” |
|
|
|
|
எனத் தமிழ
விடுதூது நூலுள் ‘பஞ்சகாப்பியம்’ குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் குறிப்புரை எழுதிய
டாக்டர்.உ. வே. சாமிநாதையர் அவர்கள், ‘பஞ்சகாப்பியம்-சீவகசிந்தாமணி முதலிய
ஐந்து நூல்கள்’ என்றும், ‘பெருங்காப்பியம் என்றது சூளாமணி, கம்ப ராமாயணம் முதலியவற்றை’
என்றும் விளக்கம் தந்துள்ளார்கள். எனவே, ஐஞ்சிறு காப்பியத்துள்ஒன்றெனத்
|
|