எனவரும்.
இங்ஙனமே ஏனைய சுவைகளுக்கும் இக் காவியத்தில் பற்பல செய்யுட்கள்
எடுத்துக்காட்டலாம். விரிவஞ்சி இவற்றை இவ்வளவோடு நிறுத்துகின்றேம்.
இனி
இப்பெருங்காப்பியம் பண்டைக் காலத்தே சான்றோர்களால் பெரிதும்
விரும்பிப்
பயிலப்பட்டிருந்தது என்பதனை அடியார்க்கு நல்லாரும், நச்சினார்க்கினியரும்
பிறருமாகிய
பண்டை உரையாசிரியர் இந்நூலினின்றும் மேற்கோள்கள் பலவற்றை
எடுத்துக் காட்டுதலால்
உணரலாம். ஆயினும் அவ்வுரையாசிரியர் போன்ற சிறப்புடைய
சான்றோர் சிந்தாமணி,
சிலப்பதிகாரம் முதலியவற்றிற்கு உரை வகுத்தாற்போல
இதற்கும் பண்டைக் காலத்தே உரை
வரையாது விட்டமை தமிழர் செய்த தவக்
குறையே யாகும். அத்தகைய சான்றோர் உரை
இதற்கும் அமைந்திருப்பின் சிந்தாமணியும்,
சிலப்பதிகாரமும் போல இதுவும் தமிழகத்தாரால்
பெரிதும் பாராட்டிப் பயிலப்பட்டிருத்தல்
ஒருதலை.
இச் சூளாமணியின் இவ்வுரையைப்பற்றி ஒரு சிறிது கூற வேண்டும். இச்
சூளாமணியை நினைக்கும் பொழுதெல்லாம் எம்மருமை நண்பர் கருப்பக்கிளர்
உயர்திருவாளர் சு. அ. இராமசாமிப் புலவர் அவர்களை யான் நன்றியறிதலுடன்
நினைக்கின்றேன். எங்கிருக்கின்றாள் என்று தன்னால் உணரப்படாதிருந்த
சீதைக்கு இராமன்
தன் அடையாளமாகத் தன் தூதனிடத்தில் சூளாமணியைக்
கொடுத்து விடுத்தான் என்று
இராமாயணம் கூறுகின்றது. அச் சூளாமணியைக் காட்டி
அவ்விராம தூதன் அக்காதலரைத்
தொடர்பு படுத்தினாற்போல இச் சூளாமணியின்
வாயிலாகத் திரு. இராமசாமிப் புலவர்
என்னைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகத்தார்க்கு அறிமுகப் படுத்தி வைத்தார். அதன்
பிறகு இச் சூளாமணியை
யுள்ளிட்டு யான் |