எனவரும் இச்செய்யுட்கள் வெகுளிச் சுவைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாதல்
உணர்க.
இச் செவ்விலேயே சடிமன்னன் சுயம்பிரபையை அழைத்துக்கொண்டு
போய்
அத்திவிட்டனுக்குத் திருமணம் செய்வித்தனன் என்னும் செய்தியினையும்
ஒரு தூதன் வந்து
அவ்வச்சுவகண்டனுக்குக் கூறிவிடுகின்றான். அம்மம்ம! அது
கேட்டவுடன் இவன் வெகுளி
எல்லை கடந்து ஊழித்தீயே யாகிவிடுகின்றது. இச்சின
நிலையை இப்புலவர் பெருமான்
வருணிக்கும் அழகு நம் உள்ளத்தைக் கொள்ளை
கொள்கின்றது. இதைக் கேளுங்கள்:
|