828 காஞ்சிப் புராணம்

கவுசிகேசம்: உமாதேவியார் கழித்த கருஞ்சட்டையில் தோன்றிய கவுசிகி பூசித்துப் பெற்ற அருளால் சும்பன் நிசும்பன் என்னும் அசுரரை அழித்துக் காஞ்சியை காவல் செய்யும் பேறு பெற்றனள். இத்தலம் காமாட்சியம்மை கோயிலை அடுத்துப் புறத்தே வடகிழக்கில் உள்ளது.

மகாளேசம்: மாகாளன் என்னும் பாம்பு திருக்காளத்தியில் பூசனை புரிந்து வீடு பேற்றை விரும்பப் பெருமான் கட்டளைப்படி காஞ்சியை அடைந்து சிவலிங்கம் நிறுவிப் போற்றி அருள்பெற்றுப் போய்த் திருக்காளத்தியில் முத்தியை எய்திற்று. இத்தலம் காமகோட்டத்திற்கும் காளிகோயிலுக்கும் இடையில் உள்ளது.

திருமாற்பேறு: திருமால், குபன் என்னும் அரசனுக்குத் துணை நின்று அவனுக்குப் பகைவராம் ததீசி முனிவர்மீது சக்கரத்தை எறிய வயிரயாக்கையிற் பாயாது அது கூர்மழுங்கியது. சலந்தரனைத் தடித்த சக்கரத்தைச் சிவபிரானிடத்திற் பெறுமாறு உமையம்மை வழிபாடு செய்த திருமாற்பேற்றீசரை நாடொறும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு அருச்சனை புரிந்து வருவாராயினர்.

சிவபெருமான் திருமாலின் அன்பினை அளந்து காட்டுவான் மலரொன்றினை மறைத்திட மந்திரம் ஒன்றினுக்கு மலர்பெறாது தமது கண்ணைப் பறித்து மலராகத் திருவடியில் இட்டனர்.

சிவபிரான் மகிழ்ந்து சூரியமண்டிலத்தினின்றும் பேரொளியுடன் இறங்கிவரக் கண்ட தேவர் ஓட்டெடுத்தனர்; திருமால் வணங்கிப் போற்றினர். அதுகாலைச் சிவபிரானார் திருமாலை நோக்கி ‘உனக்குத் தாமரை மலரை ஒக்கும் கண்கொடுத்தோம். ஆகலின், நினக்குப் பதுமாக்கன் என்னும் பெயர் வழங்குக. இவ்வூர் இனித் திருமாற்பேறு என்னும் பெயரொடும் நிலவுக. ‘சுதரிசனம்’ என்னும் இச்சக்கரத்தால் வெல்லற்கரிய எத்துணைப் பெரும் பகையையும் வெல்லுக. நீ கூறிய பேராயிரமுங் கொண்டெம்மை யருச்சிப்போர்க்கு மலம் நீக்கி முத்தியை வழங்குவோம். அன்றியும், தீண்டச் சிவந்தார், சாதரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், சாகிசனர், திருமாற்குப் பேறளித்தார் என்னும் எட்டுப் பெயர்களும் அவ்வாயிரம் பெயருக்கு ஒப்பாகும்’ என்றருளினர்.

திருமால் மேலும் தொழுது துதித்து ‘இவ்வூரிற் கணப்பொழுது தங்கினவர்க்கும் முத்தியையும் இவ்விலிங்கத்தை வணங்கினோர் கடல் சூழ்ந்த உலகிலுள்ள சிவலிங்கங்கள் எவ்வெவற்றையும் பணிந்த பயனையும் வழங்கவேண்டும்’ என வேண்ட வேண்டுவார்க்கு வேண்டுவ வழங்கும் பெருமானார் அவர்க்கு அவற்றை அருள்செய்து அச்சிவலிங்கத்துள் மறைந்தருளினர்.

இத்தலம் காஞ்சிபுரத்திற்கு வடக்கே எட்டுக்கல் தொலைவிலுள்ள ‘திருமாற்பேறு’ என்னும் தொடர் வண்டி நிலையத்தினின்றும்