அவர்கள் இவர்கட்குத்
‘திருக்குறள் வேள்’ என்னும் பட்டம் அளித்துச்
சிறப்பித்தார்கள்.
அன்று அறநெறியின் தலைநூலாகிய திருக்குறளுக்கு
விளக்கவுரை எழுதி வெளியிட்ட இவர்கள், இன்று அருள்
நெறியின் தலைநூலாகிய திருவாசகத்திற்கு எளிய உரை
எழுதி வெளியிடுகின்றார்கள். இவ்வுரை திருவாசகத்தைப்
பலரும் பொருளறிந்து ஓதிப் பயன்பெறத் துணை செய்யும்
என்பதில் ஐயமில்லை. எம் இருவரிடையே உள்ள கெழுதகை
நட்புக் காரணமாக இவ்வுரையை இவர்கள் எழுதிக்கொண்டிருக்கும்
பொழுதே இடையிடையே சில முறை கண்டு மகிழும்
வாய்ப்பை நான் பெற்றதுண்டு.
திரு. பிள்ளையவர்களது இத்திருவாசக
உரையைப்
பலரும் உணர்ந்து பயன் பெற வேண்டுவதுடன், இவர்கள்
இன்னும் பல்லாண்டுகள் தமிழ்த் தொண்டும், சைவத்தொண்டும்
செய்து நலத்துடன் வாழ இறையருளை எண்ணி இறைஞ்சுகின்றேன்!
நலம்!
|