என்பன மணிமொழிகள்.
பாண்டியன் தன் ஏவலரால் குதிரைகள் வருகின்றன என்பதை அறிந்ததும் பெருமகிழ்ச்சியுற்று, அடிகளையும் அழைத்துக் கொண்டு, குதிரைச் சேவகனை வரவேற்று, மரியாதை பலவும் செய்து இனிதிருந்தான்.
அடிகளது இடரைத் தீர்க்கும்பொருட்டுக் கொண்டுவந்த குதிரைகள் அன்று இரவே மீண்டும் நரிகளாகிக் குதிரைக் கொட்டத்தில் ஏற்கெனவேயுள்ள குதிரைகளுக்கும் ஊறு செய்து, மதுரை மக்களுக்கும் தீமை புரிந்து, காட்டுக்கு ஏகின. இதனைக் கேள்வியுற்ற பாண்டியன் வெகுண்டு, தண்டலாளரை ஏவி அடிகளை ஒறுக்கச் செய்தான். அதனால் அடிகள் ஆற்றாது அழுத துன்பத்தைப் போக்கும்பொருட்டு வையையாற்றில் பெருவெள்ளம் புரண்டு வருமாறு பெருமான் அருள் புரிந்தார். வெள்ளம் இருகரைகளையும் உடைத்துக்கொண்டு சென்று, மதுரை நகருக்குப் பெருஞ்சேதம் விளைத்தது. பாண்டியன் அடிகளுக்கு விளைத்த துன்பமே வெள்ளத்திற்குக் காரணம் என்று தெரிந்து அவரை விடுவித்தான். வெள்ளம் குறைந்தது. நகர மக்கள் அனைவருக்கும் கரையினை அடைப்பதற்குப் பங்கு பிரித்துக்கொடுக்கச் செய்தான் பாண்டிய மன்னன். மன்னன் ஆணையால் வந்தி என்னும் தவமுதியாளுக்கு ஒதுக்கப்பட்ட பங்கினை அடைக்கப் பெருமானே வந்தான். அவள் விற்கும் பிட்டைத் தவிரக் கூலி கொடுக்க முடியாத நிலைமையினையும், அதனையும் மகிழ்ச்சியோடு ஏற்றருளிய பெருமானது எளிமையினையும் அடிகளது வாக்குகளால் அறியலாம்.
|
என்றும் கூறிய பகுதிகளைக் காண்க. ஆனால், வந்தியின் ஆளாய் மண் சுமந்தருளிய பெருமான், வேலையில் கருத்துச் சிறிதும் இன்றிப் பொழுது போக்கியதும், பின்னர்ப் பாண்டியனால் பிரம்படி பட்டதும்,
|