என்ற அடிகளது வாக்கால் உணரலாம். பின்னர்,
பெருமான் வந்திக்கு முத்தியளித்து மறைந்தான்.
பெருமான் நம்பினோரைக் கைவிடமாட்டான் அன்றோ!
"பத்தி வலையிற் படுவோன் காண்க" என்ற அடிகள்
வாக்கையும் நினைவு கூர்க.
அடிகளுக்காகப் பெருமான் நரியைக்
குதிரையாக்கியதும், வையையில் நீரைப் பெருகச் செய்ததும்,
மண் சுமந்து பிரம்படி பட்டதும் உணர்ந்த பாண்டியன்,
மனம் மிக வருந்தினான்; அடிகளுக்கு வேண்டிய உபசாரங்களைச்
செய்து, அவர் விருப்பம்
போல நடந்துகொள்ள உதவினான்.
அடிகள் பின்னர் ஆலவாய் அண்ணலிடம் பிரியா
விடை பெற்றுக் கொண்டு திருப்பெருந்துறைக்கு வந்தார்;
பெருமானைப் பிரிந்த பின்னர்த் தாம் படும் துயரினை
எண்ணி அழுதார். அவ்வாறு அழுது பாடிய பாடற்பகுதியே
திருச்சதகமாகும். அடிகள், பெருமான்
அருளால் அங்கிருந்து உத்தரகோச மங்கை வந்து சேர்ந்தார்.
தம்மால் தனித்து வாழ முடியாது பிற்பட்டிருப்பதை எண்ணிப் பாடிய
பாடல்கள் நீத்தல் விண்ணப்பம். அங்கு அவருக்கு
மீண்டும் காட்சி கிடைத்தது.
|