படித்துப் பயன் பெற வேண்டும் என்று
பதவுரையோடு விளக்கவுரையும் சேர்த்து எழுதினேன்.எழுதுங்கால்
எனக்கு உறுதுணையாய் இருந்து திருத்தியும் சேர்த்தும்
உதவிய தருமையாதீனம் மகாவித்துவான் திரு. சி. அருணைவடிவேலு
முதலியார் அவர்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டவனாவேன்.
திருத்தமாக அச்சிட்டு உதவிய பழனியப்பா நிறுவனத்தாருக்கும்
என் நன்றி உரித்தாகுக.
நாயினும் கடைப்பட்ட என்னையும் ஒரு
பொருளாகக் கருதித் தாயினும் சாலப் பரிந்து ஆட்கொண்ட ஸ்ரீலஸ்ரீ
கயிலைக் குருமணி அவர்களின் பொன்னார்
திருவடிகளுக்கு இந்நூலைச் சமர்ப்பணம் செய்கிறேன்.
இங்ஙனம்,
ஜி. வரதராஜன்.
|