7. நீக்கை யென்னுஞ் சொற்குப் பொருள் மலத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுக்குமென்று ஆகமங்கள் கூறுதலானும்....ஆன்மா ஞானமொன்றானே வீடெய்தற் பாற்றென வரையறுத்துக் கூறுதலானும், தீக்கை மாத்திரத்தானே சிவப்பேறு கூடுமென்றல் பொருந்தாதென மறுக்க.
 

lஇனி, ஒளியானன்றி இரு ணீங்காதவாறு போல, ஆணவமும் ஞானத்தானன்றித் தீக்கை மாத்திரத்தானே நீங்காதெனவும், அத்துவ சுத்தியின் அத்துவாக்கண் நிரம்பிக் கிடந்த சஞ்சித கண்ம மாத்திரையே நீங்குமெனவும், அதனானே ஞானத்திற்கு உரியனாவனெனவுங் கொள்க.......

  "மேற் சரியை கிரியா யோகங்களைச் செய்துழி நன்னெறியாகிய ஞானத்தைக் காட்டியல்லது மோ இத்தைக் கொடாவாகலான்". - போதம்-8; 1-ம் அதிகரணம்.
  குறிப்பு:- இந்நுட்பங்களை யெல்லாம் ஆளுடைய பிள்ளையார் தமது திருமணத்துள் வந்தார்க்கெல்லாம் "எமைப் போக்கருளீரே" என்று முத்தி விண்ணப்பமாகிய பாவனை - திருநோக்கம் முதலிய தீக்கை விசேடங்களையெல்லாம் செய்தும், சீபஞ்சாக்கரத் திருப்பதிகம் ஓதி ஞானத்தைக் கொடுத்தும், " இம்மணத்தில் வந்தோர், ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக"(3146) என்று முத்தி வாயிலிற் புகும் வழியினைக் காட்டியும் அருளிய வரலாறுகளுள் வைத்துக் கண்டுகொள்க.
 
8. ".....மன்ற பாண்டியன், கேட்பக் கிளந்த, மெய்ஞ்ஞானத்தின்
ஆட்பா லவர்க்கரு ளென்பதை யறியே"
 

- இருபா இருபஃது - 2

  வையை யாற்றின் கரையாகிய தீட்சா மண்டபத்தில், பாண்டியனாகிய இருவினை யொப்பும் மலபரிபாகமும் வந்த நன்மாணாக்கனுக்குப் பரம ஞானாசாரியராகிய ஆளுடைய பிள்ளையார், பாவனை-நோக்கம்-பரிசம்- முதலிய தீக்கை விசேடங்களைச் செய்த, பரம ஞானோபதேசமாகிய மெய்ஞ்ஞானத்தைப் புகட்டியருளியது "திருப்பாசுரம்" என்ற அருளிப்பாடாகும் என்பது அருணந்தி சிவாசாரியரது விளக்கம். இக்கருத்தையே ஆசிரியர்பெருமான் தமது திருப்பா.சர விரிவுரையில் விளக்கியருளினர் என்பது புராண உரையினுட் காட்டப்பட்டது. (திருப்பாசுர விளக்கவுரை பார்க்க).