முன் சேர்க்கை - 2
 


சிவமயம்

 

பிள்ளையார் சரித ஞானசாத்திர நூட்பங்களுட் சில

 
1. துரியங் கடந்தவித் தொண்டர்க்குச் சாக்கிரந்
துரியமாய் நின்றதென் றுந்தீபற
துறந்தா ரவர்களேன் றுந்தீபற.
 

- திருவுந்தியார்

 
2. சுரந்த திருமுலைக்கே துய்யசிவ ஞானஞ்
சுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் - சுரந்த
தனமுடையா டென்பாண்டி மாதேவி தாழ்ந்த
மனமுடையா ளம்பிருந்த வாறு.
 

- திருக்களிற்றுப்படியார் - 54

 
3. துரியங் கடந்தசுடர்த் தோகையுட னென்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான் - துரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யுந் தன்மைகளும்
ஆக்கியிடு மன்பர்க் கவன்.
 

- மேற்படி - 69

 
4. ஓடஞ் சிவிகை யுலவாக் கிழியடைக்கப்
பாடல் பனைதாளம் பாலைநெய்தல் - ஏடெதிர்வெப்
பென்புக் குயிர்கொடுத்த லீங்கிவைதா மோங்குபுகழ்த்
தென்புகலி வேந்தன் செயல்
 

- மேற்படி - 70

 
5. "...ஈசன தியல்பு பேசுதல் தவிர்க;
காழி மாநகர்க் கவுணியர் கடவுள்
ஞான மாகிய நற்பதி கங்கள்
எழுதுறு மன்பர்த மின்புறு மொழியாற்
களிறென வணைந்த கன்மனப் புத்தன்
முருட்டுச் சிரமொன் றுருட்டின ரன்றி
வாய்ந்த வாளொன் றேந்தின ரிலரே;
என்றது மீர்வாள் கொன்றதென் பதுபோல்
தனித் துணை யருளாற் றுணித்தன தென்பர்....."
 

- சங்கற்ப நிராகரணம் - 7-2; ஈசுவர வவிகாரவாதி நிராகரணம் - 21-29.

 
"தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்த...."
 

- சிவஞான போதம் - 8 சூ.

 
"ஈண்டு இவ்வான்மாக்களுக்கு முற்செய் தவத்தான்
ஞானநிழுமென்றது....."
 

ஞானம் - சாதனமாகிய ஞானம் என்க.

 
"ஆளுடைய பிள்ளையார் முதலிய நாயன்மார்க்குத் தவமின்றியும் ஞானம் நிகழ்ந்ததாலோ? வென்னும் ஆசங்கையை நீக்குதற்கும், படிமுறையானன்றி இவ்வொரு பிறவியிற் செய்த தவந்தானே அமையாதென்பது உணர்த்துதற்கும் முற்செய் தவம் என விசேடித்தார்".
 

- மாபாடியம்.