| இரும்பைமாகாளம் - 2862. தொண்டை நாட்டுப் பதிகளுள் ஒன்று |
| இலம்பையங்கோட்டூர் - 2902. தொண்டை நாட்டுப் பதிகளுள் ஒன்று. |
| உண்ணாமுலையாள் - 2868. திருவண்ணாமலையில் அம்மை பெயர் |
| ஏகாம்பரம் - 2843. காஞ்சிபுரம் திருக்கோயில். மாமரம்
தலமரமாதலின் வந்த பெயர். |
| கங்கை - 2549. ஆறு. |
| கச்சிமேற்றளி - 2899. கச்சிப் பல பதிகளுள் ஒன்று. |
| கச்சி அனேகதங்காவதம் - 2896. கச்சிப் பல பதிகளுள் ஒன்று. |
| கண்டுமுட்டு - 2581. புறச் சமயிகளைக் கண்டால் தீமை என்ற
சமணர் கொள்கைக்கு வழங்கும் மரபுப் பெயர். |
| கண்ணப்ப நாயனார் - 2911. அறுபான்மும்மை நாயன்மார்களுள்
ஒருவர். |
| கண்ணன் - 2749. கிருட்டினன். |
| கபாலீச்சரம் - 2974. திருமயிலாப்பூர்த் திருக்கோயிலின் பெயர். |
| கம்பர் - 2857. திருஏகாம்பரத்தில் இறைவர் பெயர் |
| கன்னிநாடு - 2760. பாண்டி நாடு. |
| கன்னிமாவனம் - 2861. திருப்பாதிரிப்புலியூர் |
| காஞ்சி நெறிக்காரைக்காடு - 2898. கச்சிப் பல பதிகளுள் ஒன்று
|
| காமக்கோட்டம் - 2896. காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மையார்
தவஞ் செய்து அறம் வளர்க்கும் தனிக் கோயில். |
| காரிகரை - 2912. தொண்டை நாட்டுத் தலம்; வைப்புத் தலங்களுள்
ஒன்று, காளத்திக்குச் செல்லும் வழியில் உள்ளது. |
| காலன் - 2638. இ யமன். |
| காழி - 2571. சீகாழி |
| காளத்தி - 2911. தொண்டை நாட்டுப் பெரும் பதியாகிய மலை. |
| காளன் - 2918. திருக்காளத்தியில் இறைவரைப் பூசித்த
பாம்பு. |
| கானப்பேர் - 2784. பாண்டி நாட்டுப் பதிகளுள் ஒன்று. |
| குரங்கணின் முட்டம் - 2882. தொண்டை நாட்டுப் பதிகளுள் ஒன்று. |
| குற்றாலம் - 2784. பாண்டி நாட்டுப் பதிகளுள் ஒன்று. |
| குறும்பலா - 2784. பாண்டிநாட்டுப் பதிகளுள் ஒன்று. |
| கேட்டுமுட்டு - 2582. கேட்கத் தகாத புறச்சமய வார்த்தையை கேட்டால்
வரும் தீமைபற்றிச் சமணர் கொள்ளை குறிக்க வழங்கும் மரபுப் பெயர். |
| குலச்சிறையார் - 2543. நெடுமாறனாரது மந்திரியார். |
| கொள்ளம்பூதூர் - 2796. சோழநாட்டுப் பதிகளுள் ஒன்று. |
| கோகரணம் - 2925. துளுவநாட்டுப் பதி. |
| கௌரியர் தலைவன் - 2611. பாண்டியர். |