சத்திர மண்டபம் - 2810. திருத்தெளிச்சேரிக் கருகில்
ஆளுடைய பிள்ளையார் அமர்ந்தருள, அவர் திருமுன்பு புத்த வாதம் நிகழ்ந்த இடம். |
சிவபாதவிருதயர் - 2777. ஆளுடைய பிள்ளையாரின் தந்தையார். |
சிவபெருமான் - 2638. |
சுழியல் - 2784. பாண்டி நாட்டுப் பதிகளுள் ஒன்று. |
சேது - 2787. இராமேச்சுரத்தில் கடற்கரை. |
ஞானமெய்ந்நெறி - 3146. சிவநெறி. |
தக்கோலம் - 2903. தொண்டை நாட்டுப் பதிகளுள் ஒன்று. |
தண்டகத் திருநாடு - 2858. தொண்டை நாடு; தண்டகன் ஆண்டமையாற்
போந்த பெயர். |
தமிழ்நாடு - 2550. பாண்டி நாடு. |
கலைச்சங்கப் புலவனார் - 2565. சிவபெருமான்; சொக்கலிங்கப்
பெருமான். |
திருஅச்சிறுபாக்கம் - 3030. தொண்டை நாட்டுப் பதிகளுள் ஒன்று. |
|
திருஅரசிலி - 3032. தொண்டை நாட்டுப் பதி. |
திருஅறையணிநல்லூர் - 2867. நாடுநாட்டுப் பதிகளுள் ஒன்று. |
திருக்கழுக்குன்று - 3027. தொண்டை நாப் பதிகளுள் ஒன்றாகிய மலை. |
திருக்கழுமலம் - 3043. சீகாழிப் பன்னிரு பெயர்களுள் கடைசிப் பெயர். |
திருக்களர் - 2794. சோழநாட்டுப் பதி. |
திருக்கேதாரம் - 2924. வடநாட்டுப் பதி. |
திருக்கேதீச்சரம் - 2788. ஈழநாட்டுப் பதி. |
திருக்கோணமலை - 2788. ஈழநாட்டுப் பதி. |
திருக்கோவலூர் - 2865. நடுநாட்டுப் பதி. |
திருத்தினைநகர் - 2860. நடுநாட்டுப் பதி. |
திருத்தெளிச்சேரி - 2802. சோழ நாட்டுப் பதி. |
திருநாவுக்கரசர் - 2772.நாயனார் |
திருநீலநக்கர் - 3051.நாயனார் |
திருநெறி - 2757. சிவநெறி |
திருநெய்த்தானம் - 2847. சோழ நாட்டுப் பதி. |
திருப்பழனம் - 2847. சோழ நாட்டுப் பதி; சத்தத் தானங்களுள் ஒன்று. |
திருப்பரங்குன்று - 2782. பாண்டி நாட்டுப் பதி. |
திருப்பருப்பதம் - 2925. வடநாட்டுப் பதி. |
திருப்பாசூர் - 8909. தொண்டை நாட்டுப் பதி. |
திருப்பாதிரிப்புலியூர் - 2860. நடு நாட்டுப் பதி. |
திருப்புத்தூர் - 2783. பாண்டி நாட்டுப் பதி. |
திருப்பூவணம் - 2784. பாண்டி நாட்டுப் பதி. |
திருமதுரை - 2774. பாண்டி நாட்டுத் தலைநகம். |
திருமயிலாபுரி - 2931. தொண்டை நாட்டுப்பதி; திரமயிலை என வழங்கும். |
திருமாணிகுழி - 2860. நடுநாட்டுப் பதி |
திருமாற்பேறு - 2900. தொண்டை நாட்டுப் பதி. |
திருமுருகர் - 3051. நாயனார் பெயர். |
திருவக்கரை - 2861. தொண்டை நாட்டுப் பதி. |
திருவடுகூர் - 2861. நடுநாட்டுப் பதி. |