திருவலி தாயம் - 2928. தொண்டை நாட்டுப் பதி.
திருவல்லம் - 2900. தொண்டை நாட்டுப் பதி.
திருவாடானை - 2789. பாண்டி நாட்டுப் பதி.
திருவாமாத்தூர் - 2863. நடுநாட்டுப் பதி.
திருவாலவாய் - 2559, 2774. மதுரைத் திருக்கோவில்.
திருவான்மியூர் - 3018. தொண்டை நாட்டுப் பதி.
திருவியமகம் - 2768, 2897. பிள்ளையாரது சந்தவிகற்பப் பதிகங்களுள் ஒருவகை.
திருவிராமேச்சுரம் - 2785. பாண்டி நாட்டுப் பதி.
திருவிருக்குக்குறள் - 2565, 2897. பிள்ளையாரது சந்த விகற்பப் பதிகங்களுள் ஒருவகை.
திருவிற்கோலம் - 2903. தொண்டை நாட்டுப் பதி.
திருவூறல் - 2903. தொண்டை நாட்டுப் பதி.
திருவெண்பாக்கம் - 2911. தொண்டை நாட்டுப் பதி.
திருவேற்காடு - 2927. தொண்டை நாட்டுப் பதி.
திருவொற்றியூர் - 2926. தொண்டை நாட்டுப் பதி.
திருவோத்தூர் - 2871. தொண்டை நாட்டுப் பதி.
தில்லை மூதூர் - 2860. சிதம்பரம்.
தில்லை வாழந்தணர் - 3042. தில்லை மறையவர் முவாயிரவர்.
தென்றிசையிற் கயிலை - 2926. திருக்காளத்தி
தோணிபுரம் - 3051. சீகாழியின் ஐந்தாவது பெயர்.
நம்பாண்டார் நம்பி - 3061. பிள்ளையாரது தேவியாரின் தந்தையார்.
நல்லூர் - 3060. திருநல்லூர்ப் பெருமணம்.
நள்ளாறு - 2680. சோழ நாட்டுப் பதி.
நாடுடை நாயகர் - 2799. திருநள்ளாற் றிறைவர்.
நீலகண்டப் பெரும்பாணனார் - 2855. நாயனார்.
நெல்வேலி - 2784. பாண்டி நாட்டுப் பதி.
பதினெண் புராணங்கள் - 2738. மாபுராணங்கள்.
பழயனூர்த் திருவாலங்காடு - 2905. தொண்டை நாட்டுப் பதி.
பாண்டி நாடு - 2790.
பாதாளீச்சரம் - 2794. சோழ நாட்டுப் பதி
பாலி நதி - 2900. தொண்டை நாட்டு ஆறு.
புத்த நந்தி - 2803. சமய வாதம்.
புறவார் பனங்காட்டூர் - 3033. தொண்டை நாட்டுப் பதி.
பூந்துருத்தி - 2826. சோழ நாட்டுப் பதி.
பூம்பாவை - 2943. மயிலாப்பூரில் பிள்ளையார், எலும்பு பெண்ணாக்கிய அம்மை பெயர்
பெண்ணை - 2878. நடுநாட்டு ஆறு.
பொன்முகலி - 2919. தொண்டை நாட்டில் காளத்திக்கருகில் வரும் ஆறு.
மங்கையர்க்கரசியார் - 2543. பாண்டிமா தேவியார்.
மணமேற்குடி - 2790. மந்திரியார் குலச்சிறையாரது பதி.
வைகையாறு - 2709, 2701. பாண்டி நாட்டு நதி.
திருஞானசம்பந்த நாயனாரின் தேவியார்: செம்பொன்செய் வாசிக் சூட்டுத் திருமணிப் புனைபூண் செல்வப், பைம்பொனின் மாலை வேய்ந்த பவளமென் கொடியொப்பார்.