|
முன்சேர்க்கை 1 |
|
உ
சிவமயம் |
|
திருஞான சம்பந்த நாயனார் சரித ஆதரவுகள் |
|
தேவார அகச்சான்றுகளும்
மற்றும் சைவத் தெய்வத் திருமுறைகளிலும்
கல்வெட்டுக்களிலும்
கண்டவற்றுட் சிலவும்
|
|
1. நாயனாரது முன்னைநிலை |
|
பிள்ளையார் பிறவியில் வாரா நிலையில் இறைவரை மறவா துட்கொண்டு அவனே தானாகச் சிவனது ஆனந்தத்தில் இருந்த ஓர் முத்தான்மா என்பது ஆசிரியர் பல இடங்களிலும் எடுத்துக்காட்டும் பொருளாகும். "பண்டுதிரு
வடிமறவாப் பான்மையோர்" (1953); "பவமற வென்னை முன்னா ளாண்டவப் பண்பு கூட, நவமலர்ப் பாதங்
கூட்டும்" (3142); "உன் பாதமெய்ந் நீழல் சேரும் பருவமீ தென்று பாட"(3143) என்பன முதலியவை
சிந்திக்கத் தக்கன.
|
|
நாயனார் தேவாரம்
|
|
2-ம் திருமுறை:- |
|
"...............திருந்தடி
மறக்குமா றிலாதவென்னை மையல்செய்திம் மண்ணின்மேற்
பிறக்குமாறு காட்டினாய்; பிணிப்படு முடம்புவிட்
டிறக்குமாறு காட்னாய்க் கிழுக்குகின்ற தென்னையே" |
|
|
- துருத்தி - நட்டராகம் - 5 |
|
"பண்டு நான்செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர
நன்னக ராரே" |
|
|
- தக்கராகம் - பாம்புரம் - 10 |
|
" .......... இன்று நல்லூர்ப் பெருமணம்
புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே" |
|
|
- அந்தாளிக் குறிஞ்சி - நல்லூர்ப் பெருமணம் - 8
|
|
2. ஞானப்பா லுண்டருளியதும், இறைவரைச் சுட்டிக் காட்டித் "தோடுடைய செவியன்"
என்று பாடியதும் :-
|
|
நாயனார் தேவாரம்
|
|
3-ம் திருமுறை :- |
|
"போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்
தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்" |
|
|
- கொல்லி - கழுமலம் - 2
|
|
குறிப்பு :- சீகாழிப் பதிகங்களிலெல்லாம் பிள்ளையார் தமக்கு ஞானப்பால் ஊட்டிய அம்மையாரது
நினைவுகொண்டு அவரை இறைவரது உடனாகவே வைத்துப் பாடியருளும் உட்குறிப்பினையும் கண்டு கொள்க.
|
|
11-ம் திருமுறை:- |
|
" * * * உலகமூன் றுக்குங் களைக ணாகி
முதலில் கால மினிதுவீற் றிருந்துழித்
தாதையொடு வந்த வேதியச் சிறுவன் |
|