பட்டினத்துப் பிள்ளையார்:-
 
தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த
"அன்னா யோ!"வென் றழைப்பமுன் னின்று
ஞான போனகத் தருளட்டிக் குழைத்த
ஆனாத் திரளை யவன்வயி னருள
வந்தணன் முனிந்து, "தந்தா ரியா?"ரென
"அவனைக் காட்டுவனப்ப! வானார்
"தோஒ டுடைய செவிய" னென்றும்
"பீஇ டுடைய பெம்மா" னென்றும்
கையிற் சுட்டிக் காட்ட
ஐய!நீ வெளிப்பட் டருளினை யாங்கே"
 

- திருக்கழுமல மும்மணிக்கோவை - 1
 

  குறிப்பு :- தளர்நடைப் பருவம் - மூவாண்டு; வளர்பசி - இதனைத் "தொடர்ந்த பிரிவுணர்வு"(1953) என்று உரை செய்தருளினர் ஆசிரியர். அருள்-அட்டி - "சிவஞானத் தின்னமுதங் குழைத்தருளி"(1966); முனிந்து தந்தா ரியாரென - "யா ரளித்த பாலடிசி லுண்டதுநீ எனவெகுளா"(1970); கையிற் சுட்டிக் காட்ட - "உச்சியினி லெடுத்தருளு மொருதிருக்கை விரற்சுட்டி"(1971); தோஒடுடைய செவியன்-பீ இடுடைய பெம்மான் - தேவாரக் குறிப்புக்கள். அளபெடைகள் செய்யு ணிறைத்தன. தேவாரம் சரித அகச்சான்றாகக் காட்டியருளினர் அடிகளார். புராணம் இதனை உட்கொண்டு அருளப்பட்டது காண்க.
 
  மேற்படி நம்பியாண்டார் நம்பிகள்:-
 
"* * * வேதத் தலைவனை மெல்விரலாற்
றோட்டியங் காத னிவனென்று தாதைக்குச் சூழ்விசும்பிற்
காட்டிய கன்று..."
 

- ஆளுடைய பிள்ளையார் - திருவந்தாதி - 13
 

 
"அளிவந்த கண்பிசைந் தேங்கலு மெங்க ளரன்றுணையாங்
கிளிவந்த சொல்லிபொற் கிண்ணத்தில் ஞான வமுதளித்த"
 

- ஆளுடைய பிள்ளையார் -திருவந்தாதி - 73
 

 
"நற்கண்ணி யளவிறந்த ஞானத்தை யமிர்தாக்கிப்
போற்கிண்ணத் தருள்புரிந்த போனகமுன் னுகர்ந்தனையே;
தோடணிகா தினனென்றுந் தொல்லமரர்க் கெஞ்ஞான்றுந்
தேடரிய பராபரனைச் செழுமறையி னகன்பொருளை
யந்திச்செம் மேனியனை யடையாளம் பலசொல்லி
யுந்தைக்குக் காணவர னுவனாமென் றுரைத்தனையே"
 

- ஆளு. பிள். - கலம்பகம் - 1
 

 
"* * * பிரம புரத்தாற் கம்மென் குதலைச்செவ்வாய்
பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்
தைய லருள்பெற் றனனென்பர்........."
 

- திருத்தொண்டர் திருவந்தாதி - 33
 

 
"ஊழி முதல்வ னுவனென்று காட்டவலான்"
 

- ஆளு. பிள். - திருத்தொகை -
 

  குறிப்பு :- பிள்ளையார் அவதரித்த பதி-குலம்-குடி முதலியவை அவரது தேவாரங்களில் பல இடத்தும் காணத் தக்கன.
 
"கழுமல வூரர்க்கு"
 

- அரசு. தேவா.