|
கல்வெட்டு :- |
|
1020
A.D. இராஜேந்திர சோழர் - 7வது ஆண்டு - தஞ்சை - நன்னிலம் - திருவிடைவாய் -
கோயில் முன்வாயிற் சுவரில் உள்ளது; விடையபுரம் என்ற விதராச பயங்கரபுரத்து வியாபாரிகள்
சொக்கக்கூத்தர், நாச்சியார், திருஞானம் பெற்ற பிள்ளையார் - பிரதிமைகளைத் தாபித்துப்
பூசை நடத்த ஏற்பாடு செய்தது:- இத்தலத்தில்தான் பிள்ளையாரது பதிகங்களுள் முன் கிடைக்காத "மறியார்கரத்
தெந்தை" என்ற பதிகம் சுவரில் கல்வெட்டுச் செதுக்கப்பட்டிருந்ததனைப் படியெடுத்து இப்போது பதிப்புக்களிற்
சேர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு (1020 கி.ஞி.) சேக்கிழார் பெருமான் காலத்துக்கு முந்தியது. |
|
3. தாளம் பெற்றது - (திருக்கோலக்கா) |
|
7-ந் திருமுறை நம்பிகள் தேவாரம்:- |
|
"நாளு மின்னிசை யாற்றமிழ் பரப்பும்ஞான சம்பந்
தனுக்குல கவர்முன்
றாள மீந்தவன் பாடலுக் கிரங்கும் தன்மை யாளனை........." |
|
|
- திருக்கோலக்கா - தக்கேசி - 8 |
|
11-ம் திருமுறை :- |
|
"உறுகின்ற வன்பினோ டொத்திய தாளமும்
" * * * கோலக்காவிற் கரநொடியாற், |
|
|
நம்பியாண்டார் நம்பிகள் |
|
பண்ணார் தரப்பாடு சண்மையர் கோன்பாணி நொந்திடுமென்
றெண்ணா வெழுந்தஞ்சு மிட்ட செம்பொற் றாளங்க ளீய" |
|
|
" * * * போனகந் தாளநன் பொன்சிவிகை
யருந்திட வொத்தமுத் தீசெய வேற வரனளித்த" |
|
|
மேற்படி- 40 |
|
" * * * ......... பெற்றது
குழகனைப் பாடிக் கோலக் காப்புக்(கு)
அழகுடைச் செம்பொற் றாள மவையே" |
|
|
- ஆளு. பிள். மும்மணிக்கோவை - 4 |
|
"தாளம் பிரியாத் தடக்கை யசைத்து" |
|
|
- மேற்படி - 19 |
|
" செம்பொனணி நீடுகிற தாளம் " |
|
|
- மேற்படி திருக்கலம்பகம் - 9 |
|
குறிப்பு :- திருக்கோலக்காவில் இறைவருக்குத் திருத்தாளமுடையார் - (சத்தபுரீசர்
-வடமொழி) என்றும் அப்திக்குத் திருத்தாளமுடையார் கோயில் என்றும், அம்மைக்கு
ஓசைகொடுத்த நாயகி என்றும் பெயர்கள் வழங்குகின்றன.
|
|
4. முத்துச் சிவிகை பெற்றது. |
|
2-ம் திருமுறை:- |
|
|
|
- பிள். தேவா - பியந்தைக்காந்தாரம் - நெல்வாயிலரத்துறை - 1 |
|
11-ம் திருமுறை:- |
|
"......... ஞானசம் பந்தற்குச் சீர்மணிகள்,
பொருந்துஞ் சிவிகை
கொடுத்தனன்காண் ... அரத்துறை மேய வரும்பொருளே" |
|
|
- ஆளு. பிள். திருவந்தாதி - 83 |
|
நம்பியாண்டார் நம்பி |
|
" .........ஏறிற்,
றத்தியு மாவுந்தவிர வரத்துறை, முத்தின் சிவிகை முன்னாட், பெற்றே" |
|
|
- ஆளு. பிள். மும்மணிக்கோவை - 4 |
|
" ......விருத்தனைப் பாடி முத்தின் சிவிகை முன்னாட்
பெற்ற
வந்தன்........" |
|
|
- மேற்படி - 28 |