"...எண்பெருங் குன்றத்தி
லன்றமணர் கூட்டத்தை யாசறுத்துப்--பொன்ற
புரைகெழுவு செந்தமிழ்ப்பா வொன்றினால் வென்றி
நிரைகழுமே லுய்த்தானை...."
 

ஆளு. பிள். - திருவுலாமாலை

 
"......அருகந்தர் குலமொன்றி முழுதுங் கழுவிலேறக் கறுத்தது......"
 

மேற்படி - திருக்கலம்பகம் - 9

 
".......புன்நறுமுறுகு ரைச்சமணை நிரைகழு நிறுத்தியன..."
 

- மேற்படி - 34

 
".......மன்னு குண்டரை வென்றது வாதையே"
 

- மேற்படி - 41

 
"......பாழி யமணைக் கழுவேற்றினான்...."
 

- மேற்படி - திருத்தொகை

  குறிப்பு :- இவைபற்றி 2751-ம் பாட்டின்கீழ்(IV -பக். 1061-1066 வரை) உரைத்தனவும், 2759-ம் பாட்டின் கீழும் (பக்.1075-1076), பிறாண்டும் உரைத்தவையும் பார்க்க.
  13. ஓடஞ் செலுத்தியது --(திருக்கொள்ளம்பூதூர்)
  3-ம் திருமுறை:- பிள்ளையார்
 
"....நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார் தொழ, நல்கு மாரருள் நம்பனே" (1)
"ஓடம் வந்தணை யுங்கொள்ளம் பூதூர்...." (6)
"ஆறு வந்தணை யுங்கொள்ளம் பூதூர்...." (7)
 

-ஈரடி மேல்வைப்பு - காந்தார பஞ்சமம்.

  11-ம் திருமுறை:- நம்பியாண்டார் நம்பிகள்
 
".....மருவினிய,
கொள்ளம்பூ தூர்க்குழக னாவா யதுகொடுப்ப
உள்ளமே கோலாக ஊன்றினான்....."
 

ஆளு. பிள். - திருத்தொகை

 
".......நினைந்தது, அள்ளற் பழனக் கொள்ளம் பூதூ,
ரிக்கரை யோட மக்கரைச் செலவே......"
 

- மேற்படி - மும். கோவை - 4

 

13.A. புத்தரை வாதில் வென்றது - (திருத்தெளிச்சேரி)

 

2-ம் திருமுறை:- பிள்ளையார்

 
".....வேந்த லாகிய சாக்கிய ரோடு சமணர்கள்
தந்தி றத்தன நீக்குவித் தீரோர் சதிரரே"
 

- பண் - இந்தளம் - தெளிச்சேரி - 10

  14. ஆண்பனை பெண்பனை யாக்கியது - (திருவோத்தூர்)
  1-ம் திருமுறை:- பிள்ளையார்
 
"குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்"
 

- பழந் தக்கராகம் - 11

  11-ம் திருமுறை:- நம்பியாண்டார்
 
"......ஆண்பனை பெண்பனை யாக்கி....."
 

- ஆளு. பிள். - திருவந்தாதி - 39

 
"......பாடிற்,
றருமறை யோத்தூ ராண்பனை யதனைப்
பெருநிற மெய்தும் பெண்பனை யாகவே......"
 

மேற்படி - திருமும். கோவை - 4