6. புனல் வாதம் (திருவாலவாய்)
  3-ம் திருமுறை:- பிள்ளையார்
 
"தெற்றென்று தெய்வந்தெளி யார்கரைக் கோலைதெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர் விரவும் பண்புநோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானுமன்றே" (11)
 

- கௌசிகம் - திருப்பாசுரம்- மேற்படி

 

மேற்படி

 
"ஏடுசென் றணைதரு மேடகத் தொருவன்" (11)
 

- பண். கொல்லி - ஏடகம்

  11-ம் திருமுறை:- நம்பியாண்டார் நம்பிகள்
 
"......நிலவிய
வைகையாற் றேடிட்டு வானீ ரெதிரோட்டுஞ்
செய்கையான் மிக்க செயலுடையான்......"
 

- ஆளு. பிள். திருத் தொகை.

 
".......நதிப் புனலினெதிர் பஃறி யுய்த்தன....."
 

- மேற்படி - திருக்கலம்பகம் - 34

 
"....கவிநீ ரெதிரோட மதித்தருள் செய்......."
 

-மேற்படி - 14

 
"நீரெதிர்ந்துசென்றும் (நெருப்பிற் குளிர்படைத்தும்.......)"
 

- மேற்படி - திருவுலாமாலை

  7. வாதிற் றோற்ற சமணர் கழுவேறுதல்.
  2-ம் திருமுறை :- பிள்ளையார்
 
"அமணை வாதி லழிவிக்கு மண்ணல் திருநீறு செம்மை திடமே"
 

- பொது - பியந்தைக் காந்தாரம் - 10

  11-ம் திருமுறை:- நம்பியாண்டார் நம்பிகள்
 
"....வளைபிரம் போர்கழு வாவுடலம்
விண்டினஞ் சூழக் கழுவின வாக்கிய வித்தகவே"
 

- ஆளு. பிள். - திருவந்தாதி - 6

 
"வலிகெழு குண்டர்க்கு வைகைக் கரையன்று வான்கொடுத்த
.....கவுணியர் தீபன்"
 

-மேற்படி - 12

 
".......வைகைக்
குழுவா யெதிர்ந்த வுறிகைப் பறிதலைக் குண்டர்தங்கள்
கபவா வுடலங் கழுவின வாக்கிய கற்பகமே"
 

- மேற்படி - 28

 
".....நீதிகெட்டார்
குலையக் கழுவின்குழுக் கண்டவன்...."
 

- மேற்படி - 81

 
".....வாதினில் வல்லமணைப் பண்ணைக் கழுவினுதி
வைத்து......."
 

- மேற்படி - 98

 
.....கண்டது, உறியொடு பீலி யொருகையிற் கொள்ளும்
பறிதலைச் சமணைப் பல்கழு மிசையே...."
 

ஆளு. பிள். - மும். கோவை - 4

 
".....வைகையி லமணை வாதுசெய் தறுத்த
சைவ சிகாமணி...."
 

- மேற்படி - 13

 
"......வைகை யமண்மலைந்தான்....."
 

- மேற்படி - 29

 
"....சூழொளிய
கோதைவேற் றென்னன் கூடற் குலநகரில்
வாதி லமணர் வலிதொலையக்--காதலாற்
புண்கெழு செம்புனலா றோடப் பொருதவரை
வண்கழுவிற் றைத்த மறையோனை......."