III - 92);- (7) போதிமங்கை - பூதமங்கலம்
- இவ்வூரில் கி.பி. 450-ல் புத்த தந்தர் இந்த வேணுதாச விகாரத்தில் தங்கியிருந்து
"விநய விநித்சயம்" என்னும் நூலை எழுதினார் (Prof. K. A. N. Sastrys cholas -
vol. I - p. 128):- இவ்வூரைச் சுற்றிப் பல சமணர் கிராமங்கள் இன்றும் இருக்கின்றன
:- (9) ஏகம்பத்தில் திருமடம் (புரா - பாட்டு 998 = 2896) அந்நாளில் ஏகம்பத்தில்
காபாலிக மடம் இருந்தது என்ற உண்மையை மகேந்திர வர்மன் (A.D. 600 - 630)
எழுதிய மத்தவிலாசப் பிரகசனம் என்னும் நூலைக்கொண்டு அறியலாம். |
இவற்றாற் பெறப்பட்ட தொகைப் பொருளாவன:-
சேக்கிழார் பெருமானது காலத்திலேயும் அதனையடுத்தும் இந்நாயனாரது பெயர்களுன் திருஞான
சம்பந்தர், ஆளுடைய பிள்ளையார், தமிழ் விரகர் முதலிய பல பெயர்கள் வழக்கத்தில்
இருந்தன. இவருக்குத் தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டு அவற்றுள் சிறப்பாகிய வழிபாடுகள்
நிகழ்ந்தன; பால் போனகம், பயறுடன் சமைத்த கறியமுது முதலியவை நிவேதிக்கப்பட்டன;
இவர் கோயிலினுள் இவர்பால் தலையன்பு பூண்ட மங்கையர்க்கரசி யம்மையாரையும் எழுந்தருளுவித்து
வழிபட்டனர். இவரது திருமுறைகளும் வழிபடப்பட்டன. |
சமணப் பெண்துறவிகள் குரத்தியர் எனப்பட்டனர்.
அவர்கள் பெருங் கூட்டமாகத் தனி மடங்களில் இருந்தனர். * * * புத்தர், நாயனாரிடம்
வாதுக்குப் போதி மங்கையில் வந்த காலத்துக்கு முன்பே புத்தர்களது வன்மைபெற்ற (விகாரம்
எனப்படும்) கோயிலும் புத்தர் கூட்டமும் இ ருந்தன. * * * காஞ்சிபுரத்தில் சைவர்கள்
தங்கும் மடங்கள் பல இ ருந்தன. அவற்றுள் ஒன்றில் பிள்ளையார் தங்கினர்--என்னும்
சில செய்திகளேயாம்.
|