சிவமயம்

ஆளுடைய பிள்ளையார் புராண உரைப் பதிப்பு
நிறைவு விழா

ஆச்சாபுரம்

இவ்விழா ஆச்சாபுரம் என்னும் திருநல்லூர்ப் பெருமணத்தில் 1-6-1950 (விக்ருதிவருஷ்ம் ஆண்டு வைகாசி மாதம் 19) வியாழக்கிழமையன்று சிறப்பாய் நடந்தேறியது. தரமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான அத்திருக்கோயிலில் மேற்படி ஆதீன மகாசந்நிதானங்களின் அருளாணையின் ஆதரவுப்படி இவ்விழா நிறைவெய்தியது. அதிகாலையில் திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்கும் தேவியாருக்கும் மகாபிஷேகம் மகாலங்காரம் மகாதீபாராதனை நிகழ்ந்தன. அதுபோழ்து புராண உரைப் பிரதிகளை நாயனாரது திருவடியிற் சார்த்தி வழிபாடு நிறைவாயிற்று. அதன்பின் பாலசம்பந்தர் உற்சவமூர்த்தியைச் சிவிகையில் மகாலங்காரத்துடன் எழுந்தருளுவித்து யானை சாமரை முதலிய சகல விருதுகளுடன் திருவெண்ணீற்றுமையம்மை சந்நிதிக்கு எழுந்தருளுவித்து வழிபாடு நிகழ்ந்தது எல்லாருக்கும் திருவெண்ணீறும் அரும்பிரசாதங்களும் வழங்கப்பட்டன. பின்பு சிவிகையில் திருஞான சம்பந்தப்பெருமானர் - திருநீலகண்ட யாழ்ப்பாணரும், திருமுருக நாயனாரும், திருநீலநக்க நாயனாரும் உடன் தொடர்ந்து வர, இரதத்தில் திருவீதி எழுந்தருளினர். புராண உரைச் சுவடிகளை திவ்யாலங்கிருதத்துடன், ஆதீன கர்த்தர் அவர்கள் இதற்கென்று வரவழைத்திருந்த யானைமீது எழுந்தருளுவித்து மேற்படி திருமுறைகளைச், சேக்கிழார் மரவில் வந்த ஒரு நல்லன்பர் தாங்கிவரவும், பின்னர் இருந்து ஒரு அன்பர் சாமரை யிரட்டி வரவுமாகத் திருவீதி வலம்வரும் ஆனந்தக் காட்சி நிகழ்ந்தது. அதுகாலம் முதுவேனிற் பருவமா யிருந்தும் அன்று முழுதும் சூரியன் தனது கடுங்கதிர்களை வெளிக் காட்டாது மறைத்ததும் வானத்தில் மேகங்கள் சூழ்ந்து நுண்டுளி தூற்றி மந்தமாருதம் வீசிக் குளிர்ச்சி செய்ததுமாக இருந்த நிலைகள் தெய்வத் திருவருட் கடையாளமாய் விளங்கின. சிதம்பரம் தேவார ஆசிரியர் - திரு. S. இராமலிங்க ஓதுவார் அவர்களும், அண்ணாமலைப் பல்கலைக் கழக இசையாசிரியர் தேவாரம் - திரு.சுப்பிரமணிய முதலியார் அவர்களும், சீகாழித் தேவார ஆசிரியரும், தருமபுர ஆதீன ஓதுவார் மூர்த்திகளும், சிதம்பரம் சீகாழிப் பாடசாலைகளின் மாணவ மாணவிகளும், கோயமுத்தூர்ச் சேக்கிழார் தேவாரப் பள்ளிக்கூட மாணவர்களுமாகச் சேர்ந்து பெருந் திரளாகக் கூடிய திருக்கூட்டம் சைவத் தெய்வத் திருமுறை முழக்கம் செய்து நகர்வலத்தினைச் சிறப்பித்தது. அங்கங்கும் திருவீதியில் உபசரிப்புக்கள் நிகழ்ந்தன. நகர்வலச் சிறப்பினை யாவரும் என்றும் கண்டு களிக்கும்படி சிதம்பரம் சி.ப. தேவார பாடசாலை அதிபர் திரு.சின்னையா முதலியார் அவர்கள் படங்கள்(போட்டோ) எடுத்து உதவினர். சீகாழி சிதம்பரம் முதலிய பல பதிகளினின்றும் அடியவர்களும பெரிய மிராசுதார்களும் திரளாகக் கூடிவந்து வழிபாட்டிலும் நகர்வலத்திலும் கலந்து சிறப்பித்தனர். வந்தவர்க்கெல்லாம் விழாவின் முன்னை நாளும், விழாவில் முப்போதும், பின்னாளும் உறையுள், உணவு முதலிய எல்லா வசதிகளையும் ஆச்சாபுரம் மிராசுதாரும், பஞ்சாயத்துக் தலைவரும், கூட்டுறவுச் சங்கத் தலைவரும், அட்வொகேட்டுமாகிய உயர்