புராணத்தின் பெருமை எங்கே? அடியேனது சிறுமை எங்கே? மலையுச்சியும்
கடலாழமும் ஒவ்வினும் ஒவ்வாதே! இப்பெரும் பணியை எண்ணாது துணிந்த எனது
பேதைமையினையும் பொறுத்தருளி அடியேனது சிறு தகுதிக்கேற்றவாறு இப்பெரும்
பணியினைச் சிறியேனையும் ஒரு கருவியாக் கொண்டு நிறைவேற்றியருளிய ஸ்ரீ
நடராசப் பெருமானது பெருங் கருணையினை என்னென்று போற்றிசைப்பேன்?-
“இத்தனையு மெம்பரமோ வைய வையோ வெம்பெருமான் றிருக்கருணை
யிருந்தவாறே”; அடியேன் பொருட்டுத் தமது அற்புதமாகிய சிற்சபையினின்றும்
போந்து தேவியுந் தாமுமாக இந்த ராசசபையிற் கொலுவமர்ந்து எளிய எனது
எழுத்துத் திருப்பணியினையும் ஏன்றுகொண் டருளியது எம்பெருமானது கருணையின்
பெருக்கேயன்றோ? இப்பணியின் இடையே எத்தனை விகாதங்கள்! ஒன்றன்று. பலவே;
உயிருக்காபத்தான பிணிகளுக்கும் அளவில்லை. தொடக்கத்தில் 1936-ம் ஆண்டு
திருநீலகண்ட நாயனார் புராணம் அச்சிலிருக்கும் போது அடியேனது மூக்கினுள் ஒரு
பரு வந்து முகம் வீங்கி விகாரப்பட்டு நினைவும் மாறும் நிலை; அன்று அந்த ஒரு
புராணமாவது நிறைவாயிற் றென்றிருக் கட்டுமே என்ற ஏக்கத்தால்
மருத்துவராணையினையும் மீறிப் படுக்கையினின்றும் எழுந்து என்வீட்டாரும் அறியாத
நிலையில் புரூப் திருத்தினேன். அன்று அவரறியாதே ஒரு மரண சாசனமும்
 எழுதினேன். இறைவரருளால் அந்நோயினின்றும் தப்பினேன். அதன்பின் அவ்வாறு
உயிர்க்காபத்தான பிணி நிலைகளும் பல. ஆனால் எந்நாளும் விடாது தமது
பூசையினை மட்டும் வழுவாமல் எளியேன்பாற் கொண்டருளியது இதுவரை
இறைவனருள். சிவபூசையில் வேண்டியவற்றை விண்ணப்பிக்கும் இடமொன்றுண்டு.
தினமும் அடியேனது பிரார்த்தனைகள் மூன்று. அவற்றுள் ஒன்று இப்புராணமுற்றும்
உரை எழுத்திலாவது நிறைவேற்றுவிக்க வேண்டு மென்பதாகும்; அதனை நாணாளும்
கேட்டுவந்தஅடியேனது ஆன்மார்த்த நாயகராகிய பட்டிப்பெருமான் “பன்னா
ளழைத்தால், இவனெனைப் பன்னா ளழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே” என்றபடி
இன்று அதனை முற்றுப் பெறவும் அன்பர்கள் ஆசிபுரியவும் அருள் புரிந்தனர். எனது
தந்தையார் மிகுந்த பணம் செலவிட்டு எனக்கு அட்டவர்க்கம் முதலானவை
கணக்கிட்டநீண்டதொரு சாதகக் குறிப்பு எழுதி வைத்துள்ளார். அதன் கடைசியில்
இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:- “இதன்மேல் புதன் திசையில் சுக்கிரன் புத்தி வருடம் 2
மாதம் 10க்குச் சர்வதாரி வருடம் பங்குனி மாதம் 12 வரைக்கும் நடந்துவரும் பலன்
குணதோடமிசிரம். விசேஷம் சென்மாதி வயது வருடம் 70 மாதம் 0 தினம் 21;
இதன்மேல் பெரியோர்கள் சாவகாசத்தில் ஆலோசித்து எழுத வேண்டியது. சுபமஸ்து.
தீர்க்காயுஷ்மஸ்து” என்று முடித்திருக்கிறது. ஆனால் அக்காலத்தின் பலனும்
அவ்வாறுதானிருந்தது. அந்தச் சாதகக் குறிப்பின்படி உண்மை நிகழ்ந்திருப்பின்
இவ்வுரை எழுத்து நிறைவும் காண இயலாமற் போயிருக்கும். வேறு ஒரு சோதிடர்
சில ஆண்டுகளின் முன்னர் அடியேன் சாதகத்தைப் பார்த்து வயது 66 ஆண்டு
நிச்சயித்தார். மற்றொருவர் கைரேகை