முற்சேர்க்கை - 1


சிவமயம்

திருச்சிற்றம்பலம்

பெயர் விளக்கம் (VII பகுதி)
- - - - -

அதிகன் - 3958. கருவூர்ப்பக்கத்தில் மலையரணத்துள் அரசாண்ட சிற்றரசன்.
புகழ்ச் சோழருக்குத் திறைகொடாது மறுத்துப் போர்புரிந்து தோற்றோடினன்.

அதிபத்தர் - 3991. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர்.

அநபாயன் - 3949. குலோத்துங்கச்சோழர் II. ஆசிரியரைக்கொண்டு
இப்புராணம் இயற்றுவித்து முறை வகுத்த பெருமகனார்.
 
அயிராவதக் களிறு - 3947. இந்திரனது வெள்ளையானை.

அறுவையர் குலம் - 4193. துணிநெய்வோர் குலம்; சாலியர் என்பவர்.

ஆதித்தன் புகழ்மரபு - 4111. ஆதித்தச் சோழர் மரபு.

ஆதிரை நாள் - 3886. சிவனுக்குகந்த நாள்; திருவாதிரை.

ஆழித்தேர் - 4122. திருவாரூர்த் தேர்.

இசைஞானிப் பிராட்டியார் - 4288. நம்பியாரூரருடைய தாயார்.

இடங்கழியார் - 4108. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர்.

இருக்குவேளூர் - 4055. கணம்புல்ல நாயனாரது பதி. வடவெள்ளாற்றுத்
தென்கரையில் உள்ளது. சேலம் சில்லாவில் உள்ளது. பேளூர் என வழங்குவது.

இருக்குவேள் மன்னர் - (வேளிர்) - 4116. ஒரு அரச மரபு.
 
உதியர் - 3775. சேரர்.

எருத்கத்தம்புலியூர் - 4215. நடுநாட்டுப் பதி. திருநீலகண்ட யாழ்ப்பாண
நாயனாரது பதி.

ஐயடிகள் காடவர்கோன் - 4015. பல்லவச்சோழர். அறுபத்துமூன்று
நாயன்மார்களுள் ஒருவர். சைவத்திருநெறியா லரசளித்தவர்; அரசாட்சி இன்னலென
இகழ்ந்து துறந்து பதிதோறும் சென்று ஓர் ஓர் வெண்பாப் பாடினார். அவை
க்ஷேத்திரத் திருவெண்பா என்னும் நூலாகத் தொடுக்கப்பட்டிருக்கின்றன.

கணநாதர் - 3922. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர்.

கணம்புல்லர் - 4083. மேற்படி.

களந்தை - 3930. கூற்றுவ நாயனாரது பதி.

கமலவதி - 4203. கோச்செங்கட்சோழ நாயனாரது தாயார்.

கருவூர் - 3953. கொங்குநாட்டுப்பதி. சோழர்களது தலைநகரங்களுள் ஒன்று.
புகழ்ச்சோழ நாயனார் சரிதம் நிகழ்ந்த பதி.

கலிக்கம்பர் - 4011. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர்.

கலிநீதியார் - 4021. மேற்படி