கழறிற்றறிவார் - 3763. சேரமான்பெருமாணாயனாருக்கு
வழங்கிய காரணப்
பெயர். சேரலனார் - 3820; சேரர்குலப்பெருமாள் -
3819; கேரளனார் - 3874;
கழறிற்றறியும் திருவடி - 3897; பெருமாள் - 3899. உதியர்பிரான்
- 3899;
வானவரம்பனார் - 3904; சேரர்பெருமாள் - 4231; மலையர்கள் தலைவர் -
4254; புவி முதல் வேந்தர் - 3264; வில்லவர் பெருமான் - 4266; சேரலன் -4272.
|
கழற்சிங்க நாயனார் - 4085. காடவச்சோழர்;
பல்லவர் குலம்.
|
காஞ்சி - 4052. காஞ்சிபுரம். தொண்டைநாட்டின் முதற்பத
|
காடவர்கோன் - 4179. இராசசிம்மன் என்னும் பல்லவச்
சோழர் என்பர்.
காஞ்சிபுரத்திற் கைலாசநாதர் கோயிலை எடுப்பித்தவர். கயிலைமலையின்
அமைப்புடன் விளங்குவது இத்திருக்கோயில்.
|
காடுகாள் - 3436. துர்க்கை.
|
காம்பீலி - 4192. பல்லாரிச் சில்லாவிலுள்ள பழய
சிவத்தலம். நேசநாயனாரது
பதி.
|
காரியார் - 4063. அறுபத்துமூன்று நாயன்மார்களுள்
ஒருவர்.
|
காளையார் - 3862. திருக்கானப்பேர் என்னும்
காளையார்கோயில் இறைவரது
பெயர்.
|
குடக்கொங்கு - 4232. கொங்குநாட்டின் மூன்று பகுதிகளுள்
ஒன்று. மேல்
கொங்கு என்பது “மீகொங்கு” என்பது நம்பிகள் தேவாரம். வடகொங்கு, கீழ்கொங்கு
என்பன மற்றையவை.
|
கூத்தர் - 3854. திருக்குற்றாலத்தில் இறைவர்
பெயர். “குறும்பலா நாதர்”
என்பவர் வேறு.
|
கூற்றுவனார் - 3929. அறுபத்துமூன்று நாயன்மார்களுள்
ஒருவர்.
|
கொங்கர் நாடு - 3797. கொங்குநாடு. கொங்கர் என்ற
குறுநில மன்னர்கள்
ஆண்டுவந்ததனால் போந்த பெயர். சேரநாடு - சோழநாடு - பாண்டிநாடு
என்பன
போல.
|
கொடுங்கோளூர் - 3748. சேரமன்னர்களது தலைநகர்.
அவர்களது
அரண்மனையிருந்த பதி; இதில் பகவதி என்று வழங்கும் கண்ணகிகோயில்
சிறைப்புடையது.
தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று.
|
கொடும்பாளூர் - 4110. கோனாட்டின் கொடிநகரம்.
|
கோச்செங்கட்சோழர் - 4196. அறுபத்துமூன்று நாயன்மார்களுள்
ஒருவர்.
|
கோட்புலியார் - 4333. அறுபத்துமூன்று நாயன்மார்களுள்
ஒருவர்.
|
கோனாடு - 4109. சோழநாட்டின் உட்பிரிவுகளுள்
ஒன்று. கானாடு -என்பதுபோல.
|
சக்கரப்பாடித்தெரு - 4026. தயிலவினையாளர்
தெரு.
|
சடையனார் - 4226. ஆளுடைய நம்பிகளது தந்தையார்.
|
சத்தியார் - 4038; அறுபத்துமூன்று நாயன்மார்களுள்
ஒருவர்.
பெயர்க்காரணம் நாவரியும் சத்தியுடையவர் (4041 - 4045).
|
சந்திர தீர்த்தம் - 4197. காவிரிக்கரையில்
திருவானைக்காவின் பக்கம் உள்ளதோர் தீர்த்தம்.
|
சாலியர் - 4191. துணிநெய்யும் குலத்தவர்.
அறுவையர்.
|
சிவகாமியாண்டார் - 3956. சிவகாமியாண்டார்
என்னும் அடியவர்;
திருக்கருவூரில் திருவானிலையுடைய இறைவருக்குப் பூத்திருப்பணி செய்பவர்;
இவர்கையில் தாங்கிய பூக்கூடையை அரசரது யானை பறித்துச் சிந்தியதனால்
அதனையும |