திருக்கேதீச்சுரம் - 3856. ஈழுநாட்டுப்பதி. இராமேச்சுரத்தி லிருந்தபடியே
இதனை வணங்கி வழிபட்டு நம்பிகள் திருப்பதிக மருளினர்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் - 4214. அறுபத்துமூன்று நாயன்மார்களுள்
ஒருவர்.

திருநின்றவூர் - 4171. தொண்டை நாட்டிலுள்ள தலம். தின்னனூர் என
வழங்கும் (இரயில்) நிலயத்தின் அணிமையில் தெற்கில்  நாழிகை யளவில் உள்ளது.
தேவார வைப்புத்தலங்களுள் ஒன்று.

திருப்பிடவூர் - 4280. சேரனார் கயிலையில் அரங்கேற்றிய ஞான வுலாவைக்
கேட்ட மாசாத்தனார் அதனை இப்பதியில் உலகவரறிய வெளிப்படுத்தியருளினர்.

திருப்புக்கொளியூர் - 4232. இது அவிநாசி என வழங்கும் கொங்கு நாட்டுப்
பதி. நம்பிகள் முதலைவாய்ப் பிள்ளை அழைத்தருளிய அற்புதம் நிகழ்ந்த பதி.

திருமயிலாபுரி - 4079. மயிலாப்பூர்.

திருமலை - 4266. திருக்கயிலைமலை.

திருமுருகன் பூண்டி - 3911. கொங்கு நாட்டுப் பாடல் பெற்ற பதிகளுள்
ஒன்று; நம்பிகளது வேடர்பறி அற்புதம் நிகழ்ந்த பதி.

திருமுனைப்பாடி நாடு - 3883. நடு நாட்டின் ஒரு பகுதி; முனையர் -
முனையதரையர் என்ற சிற்றரசர்களால் ஆளப்பட்டமையால் இப்பெயர் பெற்றது. திரு
நாவுக்கரசு நாயனாரும் ஆளுடைய நம்பிகளும் அவதரிக்கப்பெற்ற நாடு.

திருவஞ்சைக்களம் - 3748. சேரர் தலைநகரத்தின் ஒரு பகுதி. நம்பிகளும்
இப்பதியில் வழிபட்டனர். மலைநாட்டில் பாடல் பெற்ற பதி இஃதொன்றே; நம்பிகளும்
சேரமானாரும் இங்கு நின்றும் முறையே யானைமீதும் குதிரைமீதும் ஏறிச் சென்று
திருக்கயிலை யடைந்தனர்.

திருவானிலைக் கோயில் - 3959. கருவூரில் உள்ள திருக்கோயிலின் பெயர்.

திருவுலாப் புறம் - 4275. திருவுலா என்னும் பிரபந்தம்.

திருவொற்றியூர் - 4022. தொண்டை நாட்டில் 20-வது பதி.

தில்லைவாழந்தணர் - 3933. தில்லையில் இறைவருக்கு அணுக்கத்
தொண்டுரிமை பூண்டோர். இறைவரை யுள்ளிட்டு இவர்கள் தில்லை மூவாயிரவர்
எனப் பெறுவார்கள். இப்போது தீட்சிதர்கள் என்று வழங்கப் பெறுகின்றார்கள்.

தேவாசிரியன் - 3815. திருவாரூரில் கோபுர வாய்தலினை அடுத்துள்ள
பெருமண்டபம். அடியார்கள் நிறைந்துறைந்துள்ளது. இங்கு நம்பிகள் திருத்தொண்டத்
தொகை அருளினார்.

தொண்டை நன்னாடு - 4074 - 4022. தொண்டை நாடு; ஆதொண்டைச்
சக்கரவர்த்தியால் ஆளப்பட்டதாற் போந்த பெயர்.

நரசிங்க முனையரையர் - 3982. அறுபத்து மூன்று நாயன்மார்களுள்
ஒருவர்.
நெடுமாறர் - 4068. நின்றசீர் நெடுமாற நாயனார். அறுபத்து மூன்று
நாயன்மார்களுள் ஒருவர்.

நெல்வேலிச் செருக்களம் - 4071. திருநெல்வேலிக் கருகில் நின்றசீர்நெடுமாறர்
வடபுலத்துப் பகைவரை வென்ற போர்க்களம்.

நேசர் - 4191. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்.

பஞ்சவனார் - 4075. பாண்டியர்.

படம்பக்கநாயகர் - 4035. திருவொற்றியூரில் புற்றுவடிவத்துள் எழுந்தருளிய
திருமூலட்டான நாதர்