பரவையார் - 3820. முன்னை நிலையில் கமலினியார் என்ற பெயருடன்
கயிலையில் உமையம்மையாருக்குப் பணி செய்த சேடியார்; திருவாரூரில் அவதரித்து
இப்பெயருடன் விளங்கியவர். ஆளுடைய நம்பிகளது முதல் தேவியார்.

பாணபத்திரர் - 3773. திருவாலவாயிறைவரிடத்து மிக்க அன்பு
பூண்டொழுகியவர். அவரது திருமுகங் கொண்டு சென்று சேரமானாரிடம் பொருள்
பெற்றவர்.

பாண்டி நாட்டுப்பதிகள்:-

திரு ஆப்பனூர் - 3848, மதுரையின் அணிமையில் வையையாற்றுக்கு
வடகரையில் உள்ள பதி. பாண்டி நாட்டுத் தேவாரம் பெற்ற பதிகளில் 2-வது பதி.
ஆலவாய் - 4215. மதுரை; பாண்டி நாட்டு 1-வது பதி.

இராமேச்சுரம் - 3855. பாண்டிய நாட்டில் 8-வது பதி. இராமன் தாபித்துப்
பூசித்தபதி.

ஏடகம் - 3848. பாண்டி நாட்டில் 4-வது பதி. சமண வாதத்தில் ஆளுடைய
பிள்ளையார் அருளிய திருப்பாசுரத் திருப்பதிகம் வையை ஆற்றில் எதிரேறிச் சென்று
அவர் ஆணைப்படி தங்கிய பதி.

கானப்பேர் - 3860. பாண்டி நாட்டுள் 10-வது பதி. காளையார் கோயில்
என்று விளக்கமாக அறியப்படுவது. ஆளுடைய நம்பிகள் திருச்சுழியலில்
தங்கியபோது இப்பதியின் இறைவர் காளையாந் திருவடிவில் அவர்கனாவில் தோன்றி
“யாமிருப்பது கானப்பேர்” என்றருள, அவர் உணர்ந்து வந்து தொழுதபதி.

குற்றாலம் - 3853. பாண்டி நாட்டு 13-வது பதி. இறைவர் கூத்தர். இப்பதியில்
உள்ள குறும்பலா வேறு தனிக்கோயில். அது அகத்தியரால் விட்டுணு மூர்த்தியைச்
சிவரூபமாக்கிய பதி. அதுவும் ஆளுடைய பிள்ளையாரது பாடல்பெற்றபதி.

சுழியல் - 3857. பாண்டி நாட்டில் 12-வது பதி.

பரங்குன்றம் - 3549. பாண்டிநாட்டில் 3-வது பதி. தமிழ் மூவேந்தர்களுடனே
நம்பிகள் வழிபட்ட பதி.

புத்தூர் - 3837, பாண்டி நாட்டில் 6-வது பதி.

புனவாயில் - 3864. பாண்டிநாட்டில் 7-வது பதி. பாண்டிநாட்டு 14 பதிகளின்
மூர்த்திகளும் இங்குத் தனித்தனிக் கோயில் கொண்டருளியுள்ளார்கள்.
பூவணம் - 3844. பாண்டி நாட்டில் 11-வது பதி. தமிழ் மூவேந்தர்களும்
நம்பிகளுடனிருந்து வழிபட்டனர்.
 
நெல்வேலி - 3854. பாண்டி நாட்டில் 14-வது பதி.

பாண்டிமா தேவியார் - 4188. மங்கையர்க்கரசி யம்மையார். அறுபத்து
மூன்று நாயன்மார்களுள் ஒருவர். மங்கையருக்கரசியார் - 4076. மானி - 4189.

புகழ்த்துணையார் - 4116. மேற்படி.
 
புகழ்ச் சோழர் - 3941. மேற்படி.

பூசலார் - 4171. மேற்படி.

பெண்ணாகட மூதூர் - 4012. தூங்கானை மாடம் என்னும்பதி. நடுநாட்டில்
2-வது பதி.
பெருமாக்கோதையார் - 3752. சேரமான் பெருமாணாயனாரது இயற் பெயர்.

பொய்யடிமையில்லாத புலவர் - 3938. திருத்தொண்டத் தொகையுட்
போற்றப்பட்ட தொகையடியார்களுள் ஒரு பகுப்பினர். சங்கப்புலவர்களுள் நக்கீரர்
கபிலர் பரணராதி பல்புலவோர்.