பொன்வண்ணத்திருவந்தாதி - 3803. சேரமான்பெருமானார் சிதம்பரத்தில்
இறைவர்மீது அருளியநூல்.

பொன்னித்திருநதி - 3799. காவிரிநதி.

மகோதை - 3751 - 4255. சேரர்களது தலைநகர்.

மருகனாடு - 4120. சோழநாட்டின் உட்பிரிவுகளுள் ஒன்று.

மலைவல்லி - 4259. உமையம்மையார். (பார்வதி)

மருகல்நாட்டுத்தஞ்சாவூர் - 4120. சோழநாட்டுத்தலம். செருத்துணை
நாயனாரது பதி.

மாசாத்தனார் - 4280. அரிகரபுத்திரர் என்னும் ஐயனார். திருக்கயிலையில்
சரமானாரது திருவுலாவைக் கேட்டு அதனைத் திருப்பிடவூரில் வெளியிட்டு உலகில்
நிலவச் செய்த பெருமையுடையவர்.

மாதோட்டம் - 3856. ஈழநாட்டு நகரம். இந்நகரில் உள்ளது திருக்கேதீச்சரக்
கோயில். ஈழநாட்டுப்பதி.

முதுகுன்றம் - 4054. நடுநாட்டில் 9வது பதி. விருத்தாசலம் என வழங்குவது.

முனையடுவார் - 4088. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர்.

மூலத்தானம் - 4223. திருவாரூரில் புற்றிடங்கொண்ட பெருமான்
எழுந்தருளியுள்ள இடம்.

வஞ்சி - 4250. சேரர் தலைநகரம்.

வடவெள்ளாறு - 4055. சேலம் சில்லாவில் ஓடுகின்ற நதி. இதன்
தென்கரையில் உள்ளது கணம்புல்ல நாயனாரது பதியாகிய இருக்குவேளூர்.
வரிஞ்சையூர் - 4039. சத்திநாயனாரது பதி. சோழநாட்டில் உள்ளது.

வளவர் - 3769. சோழர்.

வன்றொண்டர் - 3791. ஆளுடைய நம்பிகள். திருநாவலூர்க்கோ -
3807; பரவையார் கொழுதனார் - 3818; ஆண்ட நம்பி - 3822; முனைப்பாடித்
திருநாடர் - 3844; நம்பி - 3884; கலைநாவலர் தம்பெருமானார் - 3897;
நம்பி ஆரூரர் - 4227; தம்பிரான்றோழர் - 4229; தமிழின் பெருமான் -
4249; திருநாவலூரர் தங்காவன் மன்னர் - 4261.

வாயிலார் - 4078. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்.

வானவரம்பர்குலம் - 3786. சேரர்மரபு.

விபஞ்சி - 3749 - யாழ் - பண்.

வீதிவிடங்கப்பெருமான் - 3827. தியாகேசர்.

வேளிர்குலம் - 4111. ஓர் அரசமரபு; சோழர் மரபின் உட்பிரிவுகளுள் ஒன்று.
இஃது இருக்குவேளிர் குலம் எனவும்படும்.