திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
இரண்டாம் தொகுதி
 
ii

மதிப்புரைகள் எழுதியிருந்தன. இம்மதிப்புரைகளெல்லாம் அடியேன் மேற்கொண்ட பகவத் கைங்கர்யமான இத்தமிழ்த்தொண்டிற்கு ஊக்கம் அளிப்பன ஆயின. ‘அதுவும் அவனது இன்னருளே’ என்கிறபடியே, எல்லாம் ஆழ்வாருடைய திருவருளேயாம்.

பகவத் விஷயத்தின் பெருமையினைக் கூற வல்லார் யாவர்! அதனை இயன்ற வரையில் எளிய நடையில் ஆக்கித் தமிழ் உலகம் படித்து இன்புறும் முறையில் செய்தல் வேண்டும் என்ற ஒன்றே அடியேனது குறிக்கோள். அவ்வாறு ஆக்குங்கால் நேரும் கஷ்டங்களையும் அருமையினையும் அதனைக் கற்று அறிந்த பெரியோர்களே அறிவார்கள். படித்தற்கே இயலாததும், பொருள் அறிந்துகோடற்கு மிக அரியதுமான அவ்வியாக்கியானத்தை இத்துணை எளிய நடையிலாயினும் வெளி வரச்செய்து தமிழ் உலகிற்கு உதவிய ஆழ்வாருடைய திருவருளைச் சிந்தித்து வாழ்த்தி வணங்குகின்றேன்.

இப்பொழுது, திருவாய்மொழியின் இரண்டாம் பத்தின் வியாக்கியானத்திற்கு ‘ஈட்டின் தமிழாக்கம்’ என்ற இந்நூல் ஆழ்வாருடைய திருவருளால் வெளி வருகின்றது. தமிழ் உலகம் இதனையும் ஏற்று அடியேற்கு ஊக்கம் அளிக்கும் என்பது அடியேனது துணிவு.

ஈட்டு வியாக்கினயாத்திற்கு மூல புருஷரும், அடியார்கள் வாழ அரங்கநகர் வாழச் சடகோபன் தண்தமிழ்நூல் வாழக் கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ அவதரித்தவருமான பெரியார் நம்பிள்ளையின் வைபவத்தையும், வியாக்கியானத்தில் ஆங்காங்கு அமைந்துள்ள அரிய பெரிய கருத்துகள் முதலியவற்றையும் தொகுத்து விரிவாக எழுதிப் பத்தாம் பத்தின் முதலிலும் ஈற்றிலும் சேர்த்து வெளியிடக் கருதியுள்ளேன்; ஆழ்வாருடைய திருவருள் முற்றுவிப்பதாகுக.

பெரியோர் பலர் விரும்பியவாறு, வியாக்கியானத்தில் காட்டப்பட்ட மேற்கோள் சுலோகங்களை எல்லாம் தொகுத்து, இந்நூலினிறுதியில் பிற்சேர்க்கையாகச் சேர்ந்துள்ளேன்.

இருமொழிப் புலமையும் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய கிரந்தங்களில் நிறைந்த ஞானமுமுடையவரும், ஆசார சீலரும், அரிய பல