திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஆறாம் தொகுதி
1

முகவுரை
 

  உரிக்கின்ற கோடலின் உந்துகந் தம்மென ஒன்றுமின்றி
விரிக்குந் தொறும்வெறும் பாழாய் விடும்பிறர் புன்கவிமெய்
தெரிக்கின்ற கோச்சட கோபன்தன் தெய்வக் கவிபுவியில்
சுரிக்கின்ற நுண்மணல் ஊற்றொக்கும் தோண்டச் சுரத்தலினே.

(கம்பநாடர்.)

திருமகள்கேள்வனான சர்வேசுவரனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வாருடைய அருளிச்செயலாகிய திருவாய் மொழியின் ஆறாம்பத்திற்கு ‘ஈட்டின் தமிழாக்கம்’ என்னும் பெயரிய உரை எம் குலங்கொழுந்தாகிய ஆழ்வாருடைய திருவருளால் வெளிவருகின்றது. முன் வெளிவந்த ஐந்து பத்துக்களையும் ஏற்ற தமிழ் உலகம் இதனையும் ஏற்று அடியேற்கு ஊக்கம் அளிக்கும் என்பது அடியேன் எண்ணம்.

இவ்வுரையை எழுதி வந்த காலத்தும் பதிப்பித்த காலத்தும் வேண்டிய உதவிகளைச் செய்த பெரியார்கட்கும் நண்பர்கட்கும் நன்றி செலுத்துகிறேன்.

இவ்வுரையை, சென்னைப் பல்கலைக் கழகத்தார் அச்சிடுதற்குக் காரணராயிருந்த சொல்லின்செல்வர் தமிழ்ப் பேராசிரியர் உயர்திரு. ரா. பி. சேதுப் பிள்ளை, B.A., B.L., அவர்கட்கும், தொடர்ச்சியாக வெளியிட்டு உதவிவரும் சென்னைப் பல்கலைக் கழக அதிகாரிகட்கும் நன்றி செலுத்துங் கடப்பாடுடையேன்.

குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல்
கற்றறிந்த மாந்தர் கடன்.

   சென்னை, 

}

இங்ஙனம்,
   22-9-1955.  பு. ரா. புருஷோத்தம நாயடு.