பெரியீர்!
முறையே, தமிழ் மறையாகிய திருவாய்மொழியின் ஏழாம் பத்து ஈட்டின் தமிழ் ஆக்கம்
இறைவன் திருவருளால் வெளி வருகின்றது. முன்னைய பத்துகளை ஏற்ற தமிழ் உலகம் இதனையும் ஏற்று
அடியேற்கு ஊக்கம் அளிக்கும் என்பது அடியேனது துணிவு.
இவ்வுரையை எழுதி வந்த காலத்தும் பதிப்பித்த காலத்தும் ஆங்காங்கு வேண்டிய உதவிகளைச் செய்து
வந்த பெரியார்கட்கும் அன்பர்கட்கும் நன்றி செலுத்தும் கடப்பாடுடையேன்.
இந்நூலைச் சென்னைப் பல்கலைக்கழகத்தார் அச்சிடுதற்குக் காரணராய் இருந்த சொல்லின் செல்வர்,
தமிழ்ப் பேராசிரியர், உயர்திரு. R.P சேதுப்பிள்ளை,
B.A., B.L.,
அவர்கட்கும், தொடர்ச்சியாக வெளியிட்டு உதவி வரும் சென்னைப் பல்கலைக்கழக அதிகாரிகட்கும்
என்றென்றும் நன்றி செலுத்தும் கடப்பாடுடையேன்.
|