வென்பதையும், - ஏகதேச
வுருவகமாய்ப் புலப்படுத்தி, இரக்ஷணிய
சிந்தாயத்திரையினுடைய விசேக்ஷ தருமங்கள் இத்தகையனவென்று
உலகத்துக்குத் தெளிவாய்த் தெரிவிக்கும்பொருட்டுத்
திருச்சபையிலுள்ளார் அவரவரே தனித்தனி செய்துவருஞ் சிந்தா
யாத்திரையை யல்ல, பொதுவில் உலகஞானி யாவானொருவன்மேற்
சாட்டி, அவன் பரம காருணியராகிய திரியேக கடவுளரசனின்
பேரருளின் மாட்சியால் தன்னையும் தன்னுடைய அகோர
பாவத்தின் நிர்ப்பந்த நிலைமையையும் அதனிமித்தந் தனக்கு
வரவிருக்கிற அதி பயங்கரமான முடிவையுமுணர்ந்து, மலங்கிக்
கலங்கி, மயங்கித் தியங்கி, ஆன்ம ரக்ஷைக்கு நான் இனி யென்ன
செய்வேனெனக் கவன்று, பரித பிக்கச்சே, இகபர சர்வார்த்த
சாதனமாகத் தனக்குக் கிடைக்கப்பெற்ற இரக்ஷணிய சுருதியைக்
கருத்தோடு வாசித்தும், குருமுன்னிலையிற் கேட்டும், இரக்ஷணிய
மூர்த்தியாகிய ஸ்ரீ கிறிஸ்துபகவான் ஒருவரே பாவ விநாசரென்றும்,
அவரது பிராயச்சித்த மகத்தான புண்ணியமே தனக்குக்
கதியென்றும், அவரைப்பற்றும் அன்பின் கிரியை செய்கிற தீர்க்க
விசுவாசமே இரக்ஷிப்புக்கு ஹேதுவென்றும் அறிந்து, சிந்தை
தெளிந்து, சர்வ பரித்தியாகஞ்செய்து, பரம குருவின்
திருவடிகளுக்கு ஸிரத்தையோடு தொழும்பு பூண்டு,
பிரதிக்ஞைபண்ணி, ஞானதீக்ஷை பெற்றுக் கிறிஸ்தவனான பிறகு,
பரிசுத்தாவியின் அநுக்கிரகத்தை யடைந்து, ஜெப தப விரத
சீலனாய், இயன்றமட்டும் சன்மார்க்க நெறி பிசகாது நடந்து,
பாவமன்னிப்பையும் உலகந் தரக்கூடாத தேவ
சமாதானத்தையுமடைந்து, சித்த சாஞ்சல்யரகிதனாய் ஸத்விநய
பயபக்தியுடன் காலங்கழித்து வருகையில் அவனுக்கு
இடைக்கிடையுண்டுபட்ட பலஹீனமும், சோதனையும்,
அவற்றாலுண்டுபட்ட தீமையும், நேர்ந்த பல தீங்கும், இதனிமித்தம்
அவனுக்குள்ளுண்டான பச்சாத்தாபங்களும், ஆண்டாண்டு
கிடைத்த தேவ ஒத்தாசைகளும், அது கொண்டடைந்த விசுவாச
உரமும், நன்றியறிந்த அவனது அன்பின் கிரியைகளும், கடைசியில்
வயோதிகனாகித் தேகவியோகமடையுஞ் சந்தர்ப்பம்,
அவனுக்குள்ளுண்டான கலக்கங்களும், அப்பொழுது
பக்தவற்சலராகிய ஸ்ரீ கிறிஸ்து பெருமான் பிரசன்னராகித் தமது
ஐங்காயத் திருக்கோலக் காட்சியளித்து, அஞ்சேல் அஞ்சேலென்று
திருவாய் மலர்ந்து, அன்பின் திருக்கரம் நீட்டி, ஆவலோடு
பற்றிப் பிடித்து, ஆதரவு புரிந்து, தமது சரணார விந்தத்தை
யடைவித்தருளிய சமயம், கிறிஸ்தவனடைந்த பரமானந்தமுமாகிய
இத்யாதி புனித விஷயங்களை யாத்திராரூடமாக இயற்றிய சொப்பன
பாவனா சரிதமாம்.
4.
இந்த நூல் -
|