கருணையைப்பொழியுங் கண்களையும் அவரது திருமேனியையும்
திருப்பாத மலர்களையும் தரிசிக்கவேண்டும் என்கிற அவா
மிகுதியால், அவரது ஆத்மாவானது பரமபதத் திருவாசலைக்
கடந்து பகவானுடைய சந்நிதியை அடைந்து, 'நல்ல
போராட்டத்தைப் போராடி ஒட்டத்தை முடித்து விசுவாசத்தைக்
காத்துக்கொண்ட பக்தர்களுக் கென்று வைக்கப்பட்டிருக்கும்
நீதியின் கிரீடத்தை அணிந்து, நித்யா நித்யகாலமாய்
ரக்ஷாபெருமானை முகமுகமாய்த் தரிசித்து வாழும் பரலோக
வாழ்வுக்குரியராய் இம்மண்ணுலகை நீத்து விண்ணுலகுக்
கேறினார்.

தமிழ் உலகத்துக்கு ஒரு பெரும்பாக்கியம் என்னத்
தோன்றிய இப்புலவர் சிரோமணி இவ்வாறு இருபதாம்
நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதாவது 1900ஆம் வருடம்
பெப்ரவரி மாதம் 3 ஆம் நாள் பிற்பகல் ஒரு மணிக்கு தமது
எழுபத்துமூன்றாம் பிராயத்தில் சித்தியடைந்தார். அடுத்தநாட்காலை
இவர்களது சரீரம் பாளையங்கோட்டை திரித்துவ ஆலயத்துக்குக்
கொண்டுவரப்பட்டு ஆங்கு 'ஞாபக ஆராதனை' வெகு
அன்புடன் நடத்தப்பெற்று, அப்பால் சி. எம். எஸ்.
கல்லறைத்தோட்டத்தில் சகல மரியாதையுடனே சமாதி
வைக்கப்பட்டுளது.




             2 வித்வானின் குணசீலம்

வித்வசிரோமணியாகிய ஹென்ரி அல்பிரட்
கிருஷ்ணபிள்ளையினிடத்தில் அமைந்துகிடந்த குணசீலத்தை
எடுத்துக்கூறுதல் இலேசன்று.

அன்பொப்புறவு கண்ணோட்டம் அழியா வாய்மை
நாணாதி

இன்பப்பெருக்கு நற்குணங்கள் எல்லாம் நிறைந்த
சான்றோர்கள்.

என்று புலவர்களால் போற்றப்பெற்றவருள் கிருஷ்ணபிள்ளையும்
ஒருவரே. பெருந்தகையாகிய இப்புலவரிடத்துக் காணப்பட்ட
குணவிசேடங்களை கீழ்வருமாறு பாகுபடுத்திக்கூறுவாம்.

(1) கல்வியறிவு. இவரது கல்விப்பெருக்கால் இவருக்குக்
கிறிஸ்தவக் கம்பர் என்னும் பெயருண்டாயிற்று. இவரால்
இயற்றப்பட்ட இரக்ஷணிய யாத்திரிகம் என்னும் தமிழ்ப்பெருங்
காப்பியத்தின் நடை, சொற்சுவை, பொருள்சுவை, யாப்பு,
அலங்காரம் முதலிய யாவும் கம்பர் இயற்றிய இராமாயணத்துக்கு
ஒத்திருப்பதாலும், கம்ப ராமாயணத்தைப் போலவே கற்றோர்க்கு
இதயத்தை களிக்கச்செய்வதாலும் இம்மகானுபவருக்கு
கிறிஸ்தவக்கம்பன் என்று பெயர் உண்டாயிற்று.
இவ்வித்வரத்தினத்தை வியந்துகொள்ளாதவரில்லை. இவர்
காலத்திலிருந்த பெரிய வித்வசிகாமணிகளும் இவரைப் புகழ்ந்து
சன்மானித்துவந்தனர். நம் வித்வான் இரக்ஷணிய யாத்திரிகத்தை
அச்சிடும்பொருட்டு சென்னைக்கு வரத்துப்போக்காயிருந்த
காலத்தில், இவரது வித்வ சாமர்த்தியத்தையும் குணசீலத்தையும்
அறிந்த ஸ்ரீமான் வேதநாயகம்பிள்ளை வழியில் நம் வித்வானைச்
சன்மானித்த விதம் இங்கு நோக்கத்தக்கது. சிறந்த தமிழ்