இவ்விதமாக
இம்மஹாவித்வானது ஆத்மா உடலைவிட்டு
நீங்கியது. கனம் கார்மைக்கல் மிசியம்மாள் எழுதியிருக்கிற
இவ்விருத்தாந்தத்தை நோக்கும்பொழுது, நமது வித்வானுடைய
மனோவாஞ்சையானது அதிசயிக்கத்தக்க விதமாய்
நிறைவேறியிருக்கின்றதென அறியலாம். தனது உயிர்
உடலைவிட்டுப் பிரிகின்றபொழுது தன் கண்ணானது
சிலுவையில் விளங்குகின்ற இயேசுபெருமானுடைய
திருமுகதரிசனத்தைக் காணவும், தனது வாயானது
இயேசுவே ரக்ஷியும்
என்னும் திருநாம மந்திரத்தை
உச்சரிக்கவும் தனக்கு அனுக்கிரகிக்கவேண்டும் என்னும்
மனோவாஞ்சை இவருக்கிருந்தது என்பதற்கு இவர் பாடிய
பாடல்களே சான்றாகும்.
1
கிருபாகர கருணாகரக் கிளர்புண்ணியப் பொருப்பே
பெருமா அடி யேன்செய்பிழை பொறுத்தென்னுயிர்
பிரிகால்
மருவார்தரு குரிசில்திகழ் வதனாம்புஜமும்
உன்
திருநாமமந் திரமும் அகந் திகழ்க்
கடைக்கணியே.
இந்த
பக்தசிரோமணியின் மனோவாஞ்சையை பகவான்
கார்மைக் கேல் மிசியம்மாள் மூலமாய் நிறைவேற்றினாரன்றோ!
|
|
1
பொழிப்புரை: - கிருபாகரனே கருணாகரனே,
விளங்குகின்ற புண்ணிய பர்வதமே, என் பெருமானே
அடியேன் செய்த பாவங்களை மன்னித்து, என் உயிரானது
என் உடலைவிட்டுப் பிரிகின்ற நேரத்தில் பகைவர் தந்து
குருசில் இருந்துங்கூட பிரகாசித்துக்கொண்டிருந்த
தாமரைப்புஷ்பம்போன்ற உனது திருமுக தரிசனமும்,
இயேசுவே ரக்ஷியும் என்ற உனது திருநாமமந்திரமும்
எனது
ஹிருதயத்தில் விளங்கும்படி எனக்கு அருள்செய்க.
2
ஜேசுநாத ஸ்வாமியினுடைய சந்திரன்போன்ற
திருமுகமும், கொவவைக் கனிபோல் சிவந்த அவரது
திருவாயும், அன்பும் கருணையும் பொழிகின்ற அவரது
திருநேத்திரங்களும், நல்ல தேஜசோடுகூடிய அவரது
திருமேனியும் செந்தாமரை போன்ற அவரது
திருபாதங்களுமாகிய இவற்றை காணவேண்டும் என்னும்
ஆசையானது ஜுவாலித்தெழும்புகின்றபடியால் பரம எருசலேம்
பட்டணத்து அருள் கதவைத் திறவுங்கள்.
|